Paristamil Navigation Paristamil advert login

தலை இல்லாமல் தவிக்கும் ஆந்திரா: சந்தர்ப்பத்திற்காக காத்திருக்கும் சந்திரபாபு

தலை இல்லாமல் தவிக்கும் ஆந்திரா: சந்தர்ப்பத்திற்காக காத்திருக்கும் சந்திரபாபு

23 ஆவணி 2025 சனி 13:00 | பார்வைகள் : 142


ஆந்திராவில் இருந்து பிரிந்து தெலுங்கானா தனி மாநிலமாக உருவாகி, 10 ஆண்டுகள் உருண்டோடி விட்டன. ஆனால், இதுவரை ஆந்திராவுக்கான தனி தலைநகரம் உருவாகவில்லை.

மாநில பிரிவினை ஏற்பட்டதும், 2014ம் ஆண்டிலேயே தனி தலைநகரம் உருவாக்க அப்போது முதல்வராக இருந்த தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு முயற்சிகளை முன்னெடுத்தார்.

விஜயவாடா, குண்டூர் நகரங்களுக்கு இடையே தலைநகர் நிர்மாணிக்கும் இடம் அடையாளம் காணப்பட்டது. அந்த நிலப்பரப்பிற்கு, 2015ல் அமராவதி என பெயரும் சூட்டப்பட்டது.

குற்றச்சாட்டு ஹைதராபாதில் இருக்கும் அ ரசு அலுவலகங்களை அமராவதிக்கு மாற்ற தற்காலிக கட்டடங்கள் எழுப்பப்பட்டன. ஆனால், அதற்குள் 2019ல் சட்டசபை தேர்தல் வந்தது.

இம்முறை ஒய்.எஸ்.ஆர்.காங்., தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி வெற்றி பெற்று முதல்வரானார். அதன்பின், சந்திரபாபு நாயுடுவின் அமராவதி கனவு, கனவாகவே மாறியது.

புதிய தலைநகரம், ஜாதி மற்றும் பிராந்திய நோக்கத்துடன் தேர்வு செய்யப்பட்டதாக ஜெகன்மோகன் குற்றஞ்சாட்டினார். ஆந்திராவின் வளர்ச்சிக்கு ஒரு தலைநகரம் இருந்தால் போதாது; மூன்று தலைநகரம் இருக்க வேண்டும் என கூறி, இதற்காக, மூன்று தலைநகரங்கள் அமைப்பதற்கான மசோதாவையும் சட்டசபையில் அறிமுகம் செய்தார்.

அதன்படி, விசாகப்பட்டினம் நிர்வாக தலைநகராகவும், கர்னுால் நீதித்துறை தலைநகராகவும், அமராவதி சட்டசபை தலைநகராகவும் இருக்கும் என அவர் அறிவித்தார்.

அப்போது, அமராவதிக்காக நிலம் கொடுத்த விவசாயிகள், ஜெகன்மோகனின் மூன்று தலைநகர் திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

அத்துடன், 2022 மார்ச்சில், உயர் நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்தனர். விசாரணையின் முடிவில் விவசாயிகளுக்கு சாதகமாக தீர்ப்பு வந்தது. மூல திட்டத்தின்படி அமராவதியை மட்டுமே முழு தலைநகராக மேம்படுத்த வேண்டும் என உத்தரவிட்டது.

ஆனால், உச்ச நீதிமன்றம் வாயிலாக அதற்கு ஜெகன்மோகன் அரசு தடை பெற்றது. இதனால், அமராவதியை தலைநகராக்கும் பிரச்னை தொடர்ந்து நீடித்தது.

மத்திய அரசு மவுனம் பின்னர், 2024ல் மீண்டும் ஆட்சியை பிடித்த சந்திரபாபு நாயுடு, இம்முறை எப்படியாவது அமராவதியை தலைநகராக்கிவிட வேண்டும் என்ற நோக்கில் பணிகளை வேகப்படுத்தி இருக்கிறார்.

அதே சமயம், அமராவதிக்கு சட்டப்பூர்வ மற்றும் அரசியலமைப்பு அந்தஸ்து வழங்குவதற்கான சட்டத் திருத்தத்தை கொண்டு வருவதில், கூட்டணியில் இருக்கும் பா.ஜ., அரசுக்கு அவர் எந்த நெருக்கடியையும் தரவில்லை. சரியான சந்தர்ப்பத்திற்காக காத்துக் கொண்டிருக்கிறார்.

அமராவதியை, ஆந்தி ராவின் தலைநகராக்க வேண்டும் என்பது சந்திரபாபு நாயுடுவின் முக்கியமான லட்சியம் என்பது மத்திய அரசுக்கும் நன்றாகவே தெரியும். இருந்தாலும், அமராவதிக்கு அரசியலமைப்பு அந்தஸ்து வழங்கும் விவகாரத்திற்கு மத்திய அரசு இதுவரை செவிசாய்க்கவில்லை .

ஆந்திராவைப் போல, பிற மாநிலங்களும் இதுபோன்ற ஒரு கோரிக்கையை எழுப்பக்கூடும் என்பதால், அமராவதி விவகாரத்தில், மத்திய அரசு மவுனம் காத்து வருவதாக கூறப்படுகிறது.

அதே நே ரம், மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்தால், வரும் 2028 தேர்தலில், நடிகரும், துணை முதல்வருமான பவன் கல்யாணின் ஜன சேனா கட்சியுடன் கைகோர்த்து, ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்ற பா.ஜ., காய் நகர்த்தக் கூடும் என சந்திரபாபு நாயுடு சந்தேகிக்கிறார்.

மேலும், மற்ற மாநிலங்களை போல, தெலுங்கு தேசம் கட்சியையும் இரண்டாக உடைப்பதற்கான மறைமுக வேலைகளிலும் பா.ஜ., ஈடுபடலாம் என்ற அச்சம் சந்திரபாபு நாயுடுவுக்கு இருப்பதாக கூறப்படுகிறது. இதன் காரணமாகவே அமராவதி விவகாரத்தில் அவர் அடக்கி வாசிக்கிறார் என்கின்றனர் அரசியல் நோக்கர்கள்.

மறுசீரமைப்பு பிரிவினைக்குப் பின் ஆந்திரா, தெலுங்கானா என இரு மாநிலங்களுக்கும் அடுத்த 10 ஆண்டுகள் வரை ஹைதராபாத் பொதுவான தலைநகராக இருக்கும் என, ஆந்திர மறுசீரமைப்பு சட்டத்தில் சுட் டிக்காட்டப்பட்டிருந்தது.

அந்த வகையில் பார்த்தால், கடந்த 2024ம் ஆண்டுடன் அந்த காலக்கெடு முடிந்துவிட்டது. அதனால், தலைநகரமே இல்லாத மாநிலமாக ஆந்திரா கடந்த ஓராண்டாக தொடர்ந்து கொண்டு இருக்கிறது.
 

9 நாள்கள் முன்னர்

மரண அறிவித்தல்

RAJADURAI

FRANCE (SARCELLES ), BROWN ROAD KALATDI

வயது : 44

இறப்பு : 14 Aug 2025

  • Ecology

    1

  • Live Link

வர்த்தக‌ விளம்பரங்கள்