நெல்லையில் பூத் கமிட்டி மாநாடு : அமித்ஷா பங்கேற்பு

23 ஆவணி 2025 சனி 07:00 | பார்வைகள் : 133
பூத் கமிட்டி மாநாட்டு துவங்கியது. இதில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்றார். இதற்காக நெல்லை வந்த அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
தமிழகத்தில் மண்டலங்கள் தோறும் பூத் கமிட்டி மாநாடு நடத்த பா.ஜ.,திட்டமிட்டுள்ளது. முதல் மாநாடு இன்று திருநெல்வேலியில் நடக்கிறது. வண்ணார்பேட்டை வடக்கு பைபாஸ் சாலை முடிவுறும் தச்சநல்லுார் பகுதியில் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.
கேரள மாநிலம் கொச்சியில் இருந்து விமானத்தில் அமித் ஷா துாத்துக்குடி விமான நிலையம் வந்தடைந்தார். அங்கு அவருக்கு பாஜ நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் நெல்லை சென்றடைந்தார்.
தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் வீட்டில் அமித்ஷாவுக்கு தேநீர் விருந்து ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. ஆனால், கடைசி நேரத்தில் அது ரத்து செய்யப்பட்டது.
காரில் கிளம்பி தச்சநல்லுார் மாநாட்டு மேடைக்கு வந்தார். மாலை 5:30 வரை அதன் நிகழ்வில் பங்கேற்று பேசுகிறார்.
அங்கிருந்து ஆயுதப்படை மைதானத்திற்கு காரில் வரும் அவர் ஹெலிகாப்டரில் துாத்துக்குடி விமான நிலையத்திற்கு மாலை 6:00 மணிக்கு சென்றடைகிறார். விமானத்தில் டில்லி செல்கிறார்.
முதல்வருக்கு பயம்
இந்த மாநாட்டில் அண்ணாமலை பேசியதாவது: சண்டை என்று வரும்போது படைத்தளபதிகள் முன்னின்று சண்டை நடத்துவார்கள். பாஜவின் பூத் தலைவர்கள் பூத் பொறுப்பாளர்கள் அந்த சண்டையின் முன்புறம் இருக்கும் தலைவர்கள். 2026 சட்டசபை தேர்தலில் திமுக ஆட்சியை ஏன் வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என சொல்வதில் முதல் பங்கு உங்களுக்கு உண்டு.
பிரதமர் மோடி 12 ஆண்டுகளாக தொடர்ச்சியாக உழைத்து வருகிறார். அடுத்த 8 மாதம் பிரதமர் மோடிக்காக, கட்சிக்காக உழைக்க வேண்டிய பொறுப்பு பூத் பொறுப்பாளர்களுக்கு உண்டு. திமுக ஆட்சியை அகற்றிவிட்டு, தேஜ கூட்டணியை ஆட்சியை இபிஎஸ்சை ஆட்சியில் அமர வைக்க வேண்டிய பொறுப்பு தேஜ கூட்டணியின் ஒவ்வொரு தொண்டருக்கும் உண்டு. அதனை வெற்றிகரமாக செய்து முடித்து காட்ட வேண்டும். 4 ஆண்டுகாலம் மிகக் கடுமையாக உழைத்துள்ளோம். திமுக ஆட்சி வந்த பிறகு பொதுமக்களுக்கு பாதுகாப்பு அரணாக பாஜ நின்றுள்ளது.
பாஜவின் நபர்கள் கைது செய்து சிறை சென்றுள்ளோம். மக்களுக்காக போராட்டம் நடத்தி உள்ளோம். 14 முதல் 30 நாள் சிறையில் இருந்துள்ளீர்கள். இந்த 8 மாத காலம் இந்த உழைப்புக்கு ஊதியமாக கடுமையாக உழைத்து தேஜ கூட்டணியை ஆட்சியில் அமர வைக்க வேண்டிய பொறுப்பு நமக்கு உண்டு.
முதல்வர் ஸ்டாலினுக்கு எதை பார்த்தாலும் பயம். எதை பார்த்தாலும் பயந்து கொண்டு உள்ளார்.மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கொண்டு வந்த சட்டத்தை பார்த்து பயம். எதை பார்த்தாலும் பயந்து கொண்டு இருக்கும் முதல்வரை நிரந்தரமாக பயமில்லாமல் வீட்டுக்கு அனுப்ப வேண்டிய பொறுப்பு உள்ளது. இவ்வாறு அண்ணாமலை பேசினார்.
9 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

RAJADURAI
FRANCE (SARCELLES ), BROWN ROAD KALATDI
வயது : 44
இறப்பு : 14 Aug 2025
-
1