Paristamil Navigation Paristamil advert login

அதிகரிக்கும் யூத எதிர்ப்பு - பொழுதுபோக்குப் பூங்காவில் அனுமதி மறுக்கப்பட்ட யூதச் சிறுவர்கள்!

அதிகரிக்கும் யூத எதிர்ப்பு - பொழுதுபோக்குப் பூங்காவில் அனுமதி மறுக்கப்பட்ட யூதச் சிறுவர்கள்!

22 ஆவணி 2025 வெள்ளி 10:58 | பார்வைகள் : 1411


வியாழக்கிழமை, Porté-Puymorens (Pyrénées-Orientales) இல் அமைந்துள்ள ஒரு பொழுதுபோக்கு பூங்காவின் மேலாளர், 150 இஸ்ரேலிய சிறுவர்களிற்கு அந்த இடத்தில் நுழைவதை மறுத்துள்ளார். அதன் பின்னர் வைர் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டார். ஒரு விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

பிரான்சில் மற்றொரு யூத எதிர்ப்பு சம்பவம். 8 முதல் 16 வயது வரையிலான இஸ்ரேலிய சிறார்களின் ஒரு குழுவிற்கு, Porté-Puymorens (Pyrénées-Orientales) இல் அமைந்துள்ள ஒரு பொழுதுபோக்கு பூங்காவில் நுழைவு மறுக்கப்பட்டது. முன்பே முன்பதிவு செய்யப்பட்டிருந்தும், 52 வயது மேலாளர் இதை மறுத்துள்ளார். Perpignan நீதிமன்றத்தின் கூற்றுப்படி, "தனிப்பட்ட நம்பிக்கைகள்" காரணமாக இவர் இதை செய்ததாக கூறியுள்ளார்.

Prades நகரின் விசாரணைப்படையிடம்படையினருக்கு இந்த வழக்கின் விசாரணை ஒப்படைக்கப்பட்டது.

Perpignan யூதர்கள் சம்மேளனமான Crif Perpignan மற்றும் Occitanie மாகாணத்தின் யூதர்கள் அவதானிப்பு மையமான Observatoire juif de France de l'Occitanie இன் Corine Serfati-Chetrit கூற்றுப்படி, இந்த புதிய சம்பவம் "பிரான்சில் யூத எதிர்ப்பு சுனாமி நிலவுகிறது" என்பதை க் காட்டிநிற்கின்றது.. "இது எந்த சந்தேகமும் இல்லாமல், இப்போது பிரான்சின் மண்ணில் யூதர் மற்றும் இஸ்ரேலியராக இருப்பது பெரும் ஆபத்தானது என்பதற்கான மற்றொரு ஆதாரம்" என்று அவர் தெரிவித்துள்ளார்.

நீதித்துறைக்கு அறிமுகமில்லாத, மற்றும் எந்த கெட்ட பெயரும் இல்லாத, இந்த மைய மேலாளர், "ஒரு சேவை அல்லது சொத்தை வழங்குவதில் மதத்தின் அடிப்படையில் பாகுபாடு" எனும் காரணத்திற்காக காவலில் வைக்கப்பட்டார்.

இந்த குற்றம் மூன்று ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையை வழங்கக்கூடிய குற்றம் என என நீதிமன்றம் நினைவூட்டியது.

இதற்கிடையில், அந்த விடுமுறைக் குழுவினர் தங்கள் திட்டத்தை மாற்றி, மூன்று பேருந்துகளில், பிரான்சின் மற்றொரு தளத்திற்குச் சென்றனர், அதன் பாதுகாப்பை ஜேந்தார்மெரி ஏற்றுக்கொண்டது.

8 நாள்கள் முன்னர்

மரண அறிவித்தல்

RAJADURAI

FRANCE (SARCELLES ), BROWN ROAD KALATDI

வயது : 44

இறப்பு : 14 Aug 2025

  • Ecology

    1

  • Live Link

வர்த்தக‌ விளம்பரங்கள்