கொள்கை எதிரி பாஜ; அரசியல் எதிரி திமுக: மாநாட்டில் விஜய் திட்டவட்டம்!

22 ஆவணி 2025 வெள்ளி 05:45 | பார்வைகள் : 139
நம்முடைய கொள்கை எதிரி பாஜ; அரசியல் எதிரி திமுக, '', என மதுரையில் நடந்த மாநாட்டில் தவெக தலைவர் விஜய் பேசினார்.
சிங்கம் என்ன செய்யும்
மதுரையில் நடந்த தவெகவின் 2வது மாநில மாநாட்டில் விஜய் பேசியதாவது: ஒரு சிங்கம் எப்போதும் பெக்கூலியர் தான். ஒரு முறை சிங்கம் கர்ஜித்தால் அந்த சத்தம் 8 கிமீ தூரம் அதிரும். அனைத்து திசைகளிலும் அதிரும். அப்படிப்பட்ட சிங்கம் வேட்டைக்கு மட்டும் தான் வெளியே வரும். வேடிக்கை பார்க்க வராது. வேட்டையில் கூட உயிரோடு இருக்கும் விலங்குகளை தான் வேட்டையாடும். அதிலும் தன்னை விட பெரிய மிருகங்களை குறிவைத்து தாக்கும் ஜெயிக்கும். எவ்வளவு பசியிருந்தாலும், உயிரில்லாதது கெட்டுப்போனதை தொட்டுப்பார்க்காது. அவ்வளவு பெரிய சிங்கம் எதையும் தொடாது. தொட்டால் விடாது.
காட்டுக்குள் எல்லையை வகுத்து கட்டுக்குள் வைத்திருக்கும். சிங்கத்துக்கு கூட்டத்தோடு இருக்கவும் தெரியும். தனியாக இருக்கவும் தெரியும். தனியாக வர வேண்டும் என நினைத்தாலும் அஞ்சாமல் அலட்டிக்காமல் கெத்தா, தனியாக வந்து அத்தனைக்கும் தண்ணி காட்டும். எப்போதும் எதிலும் தனது தனித்தன்மையை இழக்காது. சிங்கம் எப்போதும் சிங்கமாகவே இருக்கும். காட்டில் நரிகள், குள்ளநரிகள் இருக்கலாம். ஆனால் அந்த காட்டின் ராஜா சிங்கம் தான்.
சிங்கத்தை பற்றி பேசிட்டு சிங்கக்குட்டிகளையும் சிங்கப்பெண்களை பேசாமல் இருக்க முடியுமா? என் நெஞ்சில் குடியிருக்கும் எனது தோழர், தோழிகளுக்கும் நேரில் வர முடியாத சூழலில் வீட்டில் இருந்தபடியே இந்த மாநாட்டை டிவியில் பார்த்து கொண்டிருக்கும் எனது அக்காக்கள், தாய்மார்களுக்கு எனது வணக்கம். என்னுடைய உயிர் வணக்கம். வீரம் விளையும் மதுரை மாமண்ணை வணங்குகிறேன்.
தமிழக மக்கள் உணர்வுப்பூர்வமாக நம்முடன் நிற்பவர்கள். அதற்கு அடையாளம் தான் மதுரை மண். தவெக கையில் எடுத்து இருக்கும் அரசியல் அப்படி போன்றது தான். உண்மையான அரசியல், உணர்வுப்பூர்வமான அரசியல், நல்லவர்கள் அரசியல், நல்லவர்களுக்கான அரசியல், நாட்டு மக்களுக்கான அரசியல் நல்லது மட்டுமே செய்யும் அரசியல்.
இதோ நம்முடைய 2வது மாநில மாநாடு வாகை சூடும் வரலாறு திரும்புகிறது.அப்படித்தான் இந்த மாநாட்டுக்கு பெயர் வைத்து இருக்கிறோம்.
எத்தனை கூக்குரல்
1967, 1977 ல் அரசியல் மாற்றம் நடந்ததை போல் 2026 லும் மாற்றம் நிகழப்போகிறது என்று உறுதியாக சொல்லும் மாநாடு தான் நம்முடைய 2வது மாநில மாநாடு. விக்கிரவாண்டியில் நடந்த முதல் மாநாடு வெற்றித்திருவிழா. அதற்கு பிறகு தட்பவெப்பநிலையை மாற்றியது. எத்தனை குரல். நாம் அந்த குரல்களை காதில் போடாமல் மக்கள் குரலை மட்டும் கேட்டுக் கொண்டு நமக்கு எதிராக வரும் அத்தனை கூக்குரலையும் சின்னதாக ஒரு சிரிப்போடு கடந்து வந்து இருக்கோம்.
அதில்லாமல் மாநாட்டில் ஒலிக்கும் குரல், இந்த ஒற்றை தமிழ் மகனின் குரல் மட்டும் அல்ல ஒட்டு மொத்த தமிழகத்தின் குரல். தமிழகத்தில் ஒவ்வொரு வீட்டில் ஒலிக்கும் குரல்இந்த சினிமா என்ற மாபெரும் கலை ஆயுதத்தின் வாயிலாக ஜாதி, மதம் இனம், பாலினம் கடந்து நாட்டின் மூலை முடுக்குகள் எல்லாம் நம்முடைய தோழர்களாக நம்மோடு பயணிக்க துவங்கியிருக்கும் அனைத்து மனிதர்களுக்காக ஒலிக்கும் குரல்.
மாநில உரிமைக்காக சமூக நீதிக்காக மதசார்பின்மைக்காக ஒலிக்கும் குரல்.
திரைக்கதை வசனம் பாடல்
இப்போது புதுசா ஒன்று சொல்ல துவங்கி உள்ளனர். ஆட்சியை பிடிப்பது எளிதானது இல்லை.இவர் நேரா ஷூட்டிங்கில் இருந்து வருவாராம். வந்து ஆட்சியை பிடிப்பாராம். இது எப்படி அவரால் முடியும்? அவரால் முடியவில்லை. இவரால் முடியவில்லை. அவருக்கே இத்தனை வருஷமாச்சு. இவரால் எப்படி முடியும் என ஒருபக்கம்.
இன்னொரு பக்கம் கூட்டம் எல்லாம் ஓகே தான். எப்படி ஓட்டாக மாறும். இப்படி திரைக்கதை, வசனம் பாடல்.
இருந்தாலும் விஜய் எதற்காக வந்துள்ளார். புதிதாக என்ன திட்டம் சொல்கிறார் என கேட்கின்றனர். சொல்கிறேன் தெரிந்துகொள்ளுங்கள்.
பெண் குழந்தைகள், பெண்கள் வயதானவர்களின் பாதுகாப்புக்கு முக்கியத்துவம்இளைஞர்கள், விவசாயிகள், மீனவர்கள், நெசவாளர்கள் மாற்றுத்திறனாளிகள், மூன்றாம் பாலினத்தவர்கள் எல்லாருக்கும் அரசின் சிறப்பு கவனம் தேவையோ அவர்களுக்கான அரசியல் அமைப்பதே நோக்கம்.
மாபெரும் பெண்கள் சக்தி, இளைஞர் சக்தி,மக்கள் சக்தி நம்முடன் இருக்கிறார்கள். உலகம் முழுதும் வாழும் அனைவரும் என்னை விஜய், விஜி, தளபதி, என சொந்தம் கொண்டாடும் அன்பும் ஆசியும் நம்முடன் இருக்கும்போது பாஜ உடன் கூட்டணிவைக்க நாம் என்ன உலக மகா ஊழல் கட்சியா என்ன.? இவ்வாறு விஜய் பேசினார்.
8 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

RAJADURAI
FRANCE (SARCELLES ), BROWN ROAD KALATDI
வயது : 44
இறப்பு : 14 Aug 2025
-
1