பரிஸ் : காவல்துறை வீரர்கள் மீது கத்திக்குத்து தாக்குதல்!!
21 ஆவணி 2025 வியாழன் 11:43 | பார்வைகள் : 1414
காவல்துறை வீரர்கள் இருவரை கத்தியால் குத்தி தாக்கிவிட்டு தப்பிச் சென்ற இருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பரிஸ் 17 ஆம் வட்டாரத்தில் ஓகஸ்ட் 20, நேற்று புதன்கிழமை இரவு இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. boulevard Pereire பகுதியில் திருட்டில் ஈடுபடுவதாக சந்தேகிக்கப்பட்ட இருவரை சிவில் உடையில் இருந்த காவல்துறையினர் பின் தொடர்ந்து சென்றுள்ளனர். அதை அடுத்து அவர்கள் குறித்த BAC காவல்துறையினரை தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர். கத்தி ஒன்றின் மூலம் ஒருவருக்கு கழுத்திலும், ஒருவருக்கு காதிலும் தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடினர்.
அதை அடுத்து, மேலதிக காவல்துறையினர் விரைந்து வந்து தப்பிச் சென்ற திருடர்களை துரத்திப்பிடித்து கைது செய்தனர்.
இரு காவல்துறையினரும் 18 ஆம் வட்டாரத்தில் உள்ள Bichat மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan