சிறை செல்லும் முதல்வர்களை பதவி நீக்க புதிய சட்டம்; நல்லது என்கிறார் பிரசாந்த் கிஷோர்!

21 ஆவணி 2025 வியாழன் 12:21 | பார்வைகள் : 100
சிறை செல்லும் முதல்வர்களை பதவி நீக்க புதிய சட்டம் கொண்டு வருவதற்கு, ஜன் சுராஜ் கட்சித் தலைவரும், தேர்தல் வியூக வகுப்பாளருமான பிரசாந்த் கிஷோர் ஆதரவு தெரிவித்து உள்ளார்.
கைது செய்யப்பட்டு 30 நாட்கள் சிறையில் இருந்தால், பிரதமர், முதல் அமைச்சர்கள், அமைச்சர்களை பதவி நீக்கம் செய்யும் புதிய சட்ட மசோதாவை லோக்சபாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தாக்கல் செய்தார். இது குறித்து குறித்து, ஜன் சுராஜ் கட்சித் தலைவரும், தேர்தல் வியூக வகுப்பாளருமான பிரசாந்த் கிஷோர் கூறியதாவது:
இந்த மசோதா அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. ஏனெனில், அரசியலமைப்புச் சட்டம் உருவாக்கப்பட்டபோது, அதை உருவாக்கியவர்கள் நாட்டில் அதிகாரத்தில் இருப்பவர்கள் இவ்வளவு ஊழல்வாதிகளாகவும், குற்றவாளிகளாகவும் மாறி சிறைக்குச் செல்ல வேண்டியிருக்கும் என்று எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.
மசோதா நல்லது
ஒரு தலைவர் மீது குற்றம் சாட்டப்பட்டு சிறைக்கு அனுப்பப்பட்டால், அவர்களால் சிறையில் இருந்து அரசாங்கத்தை தொடர்ந்து நடத்த முடியாது என்பதால், இந்த மசோதா நல்லது என்று நான் நம்புகிறேன். இவ்வாறு பிரசாந்த் கிஷோர் கூறினார்.
மசோதாவை படிக்கவில்லை!
இது குறித்து காங்கிரஸ் எம்பி சசிதரூர் நிருபர்களுக்கு கூறியதாவது: என்னைப் பொறுத்தவரை, இந்த மசோதா குறித்து உங்களுக்கு ஒரு கருத்தைச் சொல்லும் அளவுக்கு அந்த மசோதா குறித்து நான் இன்னும் படிக்கவில்லை.
மேலோட்டமாகப் பார்த்தால் தவறு செய்தவர்கள் தங்கள் அமைச்சர் பதவிகளை ராஜினாமா செய்ய வேண்டும் என்ற கருத்தில் எந்தத் தவறும் இல்லை என்றும் கூறினேன். மசோதாவைப் படிக்காமல் நான் அதை ஆதரிக்கவோ எதிர்க்கவோ இல்லை. இவ்வாறு சசிதரூர் கூறினார்.
7 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

RAJADURAI
FRANCE (SARCELLES ), BROWN ROAD KALATDI
வயது : 44
இறப்பு : 14 Aug 2025
-
1