ரூ.85,000 கோடியில் 97 தேஜாஸ் போர் விமானங்கள்; மத்திய அரசு ஒப்புதல்

21 ஆவணி 2025 வியாழன் 03:21 | பார்வைகள் : 131
ரூ.85,000 கோடியில் இந்திய விமானப் படைக்காக 97 புதிய தேஜாஸ் போர் விமானங்களை கொள்முதல் செய்ய மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.
பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவைக் கூட்டத்தில், 97 இலகுரக தேஜாஸ் போர் விமானங்களும், 6 மேம்பட்ட வான்வழி எச்சரிக்கை மற்றும் கட்டுப்பாட்டு விமானங்களை ரூ. 85,000 கோடி மதிப்பில் கொள்முதல் செய்ய அரசு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
தேஜாஸ் விமானங்களின் கொள்முதல் விலை ரூ. 67,000 கோடியாகவும், வான்வழி எச்சரிக்கை மற்றும் கட்டுப்பாட்டு விமானங்களின் விலை ரூ. 18,000 கோடியாகவும் இருக்கும் என கூறப்படுகிறது.
இந்திய விமானப்படையில் பல ஆண்டுகளாக சேவையாற்றி வரும் மிக்-21 ரக போர் விமானங்களுக்குப் பதிலாக, தேஜஸ் மார்க் 1ஏ ரக போர் விமானங்கள் பயன்படுத்தப்பட இருக்கிறது.
முன்பு, கடந்த 2021 பிப்ரவரியில், இந்திய விமானப்படைக்கு 83 தேஜாஸ் எம்கே-1ஏ விமானங்களை கொள்முதல் செய்ய ஹிந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் லிமிடெட் உடன் ரூ. 48,000 கோடி மதிப்பிலான ஒப்பந்தத்தில் பாதுகாப்பு அமைச்சகம் கையெழுத்திட்டது. நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, 97 புதிய தேஜாஸ் போர் விமானங்கள் கொள்முதல் செய்யப்பட இருக்கிறது.
மேக் இன் இந்தியா' திட்டத்திற்கு பெரும் உந்துதல் அளிக்கும் வகையில் தேஜாஸ் போர் விமானங்கள் கொள்முதல் செய்யப்படுகிறது.
7 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

RAJADURAI
FRANCE (SARCELLES ), BROWN ROAD KALATDI
வயது : 44
இறப்பு : 14 Aug 2025
-
1