உக்ரைன் - ரஷ்ய போரை நிறுத்தவே இந்தியா மீது வரி விதிப்பு - வெள்ளை மாளிகை

20 ஆவணி 2025 புதன் 17:32 | பார்வைகள் : 272
உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்துள்ள போரை முடிவுக்குக் கொண்டு வர ரஷ்யா மீது மறைமுக அழுத்தம் கொடுக்கும் முயற்சிகளின் ஒரு பகுதியாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் இந்தியாவின் மீது கடுமையான வரிகளை விதித்ததாக வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் கரோலின் லீவிட் தெரிவித்துள்ளார்.
போரை நிறுத்த மிகப் பெரிய அழுத்தத்தை டிரம்ப் அளித்துள்ளார். இதில் இந்தியா மீதான தடைகள் மற்றும் பிற நடவடிக்கைகளையும் அவர் எடுத்து உள்ளார்.
ரஷ்யா - உக்ரைன் போர் முடிவுக்கு வர வேண்டும் என்று டிரம்ப் மிகவும் தெளிவாக கூறி உள்ளார்.
ரஷ்யா - உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான அனைத்து வழிகளையும் அமெரிக்கா ஆராய்ந்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, ரஷ்யாவுடன் இராணுவ வர்த்தக உறவுகளை வைத்திருக்கும் நாடுகளுக்கு அழுத்தம் கொடுக்க தீர்மானித்தோம்.
ரஷ்யாவிடம் இருந்து S-400 ஏவுகணை அமைப்பை வாங்குவதற்கான இந்தியாவின் முடிவு, இந்தப் போருக்கு மறைமுகமாக ஆதரவளிப்பதாகவே நாங்கள் கருதுகிறோம். இந்தியாவுக்கு எதிராக இந்த கூடுதல் வரி விதிப்பு, ரஷ்யாவுடனான அதன் இராணுவ வர்த்தகத்தை நிறுத்துமாறு வலியுறுத்துவதற்கே.
ரஷ்யாவும் உலகெங்கிலும் உள்ள அனைத்து நாடுகளும் அமெரிக்காவை மீண்டும் மதிக்கின்றன. இது ரஷ்யா- உக்ரைனுடன் முன்னேற்றத்திற்கு வழி வகுத்தது மட்டுமல்லாமல், உலகெங்கிலும் உள்ள 7 மோதல்களை முடிவுக்குக் கொண்டுவந்தது.
இந்தியா-பாகிஸ்தான் மோதலை தடுத்து நிறுத்தினோம். இந்த இரு நாடுகளின் மோதலை முடிவுக்குக் கொண்டுவர டிரம்ப் வர்த்தகத்தை மிகவும் சக்திவாய்ந்த முறையில் பயன்படுத்தியுள்ளார் என வெள்ளை மாளிகையின் செய்திதொடர்பாளர் கரோலின் லீவிட் மேலும் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யும் பொருள்களுக்கு 25 வீத பரஸ்பர வரி விதிக்கப்பட்ட நிலையில், எச்சரிக்கையை மீறி ரஷ்யாவுடன் வர்த்தகம் செய்வதாக குற்றச்சாட்டை முன்வைத்து வரியை 50 சதவிகிதமாக டிரம்ப் உயர்த்தினார்.
இதனிடையே, ரஷ்யா மற்றும் உக்ரைன் ஜனாதிபதிகளை அடுத்தடுத்து டிரம்ப் சந்தித்து அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தினார்.
இரு தலைவர்களுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் எந்த ஒப்பந்தமும் இறுதி செய்யப்படவில்லை என்றாலும் முன்னேற்றம் ஏற்பட்டதாக தெரிவித்த டிரம்ப், போர் நிறுத்தத்துக்கான பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அறிவித்தார்.
6 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

RAJADURAI
FRANCE (SARCELLES ), BROWN ROAD KALATDI
வயது : 44
இறப்பு : 14 Aug 2025
-
1