Paristamil Navigation Paristamil advert login

கேப்டன் பிரபாகரன் 2’ உருவாகுமா ?

கேப்டன் பிரபாகரன் 2’ உருவாகுமா ?

20 ஆவணி 2025 புதன் 07:20 | பார்வைகள் : 312


தமிழ் சினிமா ஆக்‌ஷன் படப் பிரியர்களுக்கு திகட்ட திகட்ட விருந்து வைத்தவர் விஜயகாந்த். 80 களிலும் 90 களிலும் வெளியான அவரின் ஆக்‌ஷன் படங்கள் இன்றளவும் தொலைக்காட்சி மற்றும் ஓடிடி ஆகியவற்றில் பார்க்கப்பட்டு கொண்டாடப்பட்டு வருகின்றன.

அப்படி விஜயகாந்தின் திரை வாழ்க்கையில் மைல்கல்லாக அமைந்த படம்தான் அவரின் நூறாவது படமான ‘கேப்டன் பிரபாகரன்’. 1992 ஆம் ஆண்டு வெளியான இந்த திரைப்படம் அதுவரையிலான அவரின் வெற்றிகளை எல்லாம் தகர்த்தெறிந்து புதிய பென்ச்மார்க்கை உருவாக்கியது. ஆர் கே செல்வமணி இயக்கத்தில், விஜயகாந்த், சரத்குமார் மற்றும் மன்சூர் அலிகான் ஆகியோர் நடிப்பில் உருவான இந்த படத்துக்கு இளையராஜா இசையமைத்திருந்தார். விஜயகாந்த் மற்றும் இப்ராஹிம் ராவுத்தர் ஆகியோர் இணைந்து தயாரித்திருந்தனர்.

இந்நிலையில் படம் வெளியாகி 33 ஆண்டுகள் கழித்து மறைந்த விஜயகாந்தின் பிறந்த நாளை முன்னிட்டு இந்த படம் ஆகஸ்ட் 22 ஆம் தேதி மீண்டும் ரிலீஸாகிறது. இதையடுத்து படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சமீபத்தில் நடந்தது. இந்நிலையில் படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய இயக்குனர் ஆர் கே செல்வமணி “கேப்டன் மகனை (சண்முக பாண்டியனை) வைத்து கேப்டன் பிரபாகரன் 2 எடுக்க வேண்டும் என்ற ஆசை எனக்கு உள்ளது. என்னை வளர்த்த விஜயகாந்துக்கு நன்றிக்கடனாக அதை செய்ய விரும்புகிறேன்” எனக் கூறியுள்ளார். செல்வமணி படங்கள் இயக்கி 20 ஆண்டுகளுக்கு மேலாகிறது என்பது குறிப்பிடத்தகக்து.

6 நாள்கள் முன்னர்

மரண அறிவித்தல்

RAJADURAI

FRANCE (SARCELLES ), BROWN ROAD KALATDI

வயது : 44

இறப்பு : 14 Aug 2025

  • Ecology

    1

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்