Paristamil Navigation Paristamil advert login

இந்தியா - சீனா எல்லை பிரச்னை பேச்சு வெற்றி; முட்டுக்கட்டை நீங்கியதாக சீன அமைச்சர் மகிழ்ச்சி

இந்தியா - சீனா எல்லை பிரச்னை பேச்சு வெற்றி; முட்டுக்கட்டை நீங்கியதாக சீன அமைச்சர் மகிழ்ச்சி

20 ஆவணி 2025 புதன் 13:02 | பார்வைகள் : 175


இந்தியா - சீனா இடையே கடந்த காலங்களில் நீடித்த முட்டுக்கட்டைகள் தற்போது நீங்கியிருப்பதாக, சீன வெளியுறவுத் துறை அமைச்சர் வாங் யீ தெரிவித்துள்ளார். அதே போல, எல்லைப் பிரச்னை தொடர்பான பேச்சு வெற்றியடைந்திருப்பதாக தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் கூறியுள்ளார். இரண்டு நாள் அரசுமுறை பயணமாக நேற்று முன்தினம் டில்லி வந்த சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ, நம் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்து இருதரப்பு உறவுகள் குறித்து பேசினார்.

இதைத் தொடர்ந்து வர்த்தகம், பொருளாதாரம், புனித யாத்திரை, மக்களிடையே நேரடி தொடர்பு ஏற்படுத்துதல், எல்லை வர்த்தகம், இருதரப்பு உறவுகள் ஆகியவை குறித்த பேச்சுகள் ஆக்கப்பூர்வமாக அமைந்ததாக வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித் திருந்தார்.

இந்நிலையில், எல்லை பிரச்னை தொடர்பாக தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலிடம், வாங் யீ பேச்சு நேற்று நடத்தினார்.

எல்லையில் அமைதி அப்போது அவர் கூறியதாவது:

இந்தியா - சீனா இடையே எல்லை பிரச்னை குறித்து, 24வது சுற்று பேச்சுக்காக இங்கு வந்திருப்பதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன். கடந்த சில ஆண்டுகளாக இரு நாடுகளுக்கும் இடையே ஏற்பட்ட முட்டுக்கட்டை தேவையற்றது. இரு நாடுகளுமே அதை விரும்பவில்லை.

நீண்ட காலமாக நீடித்த சிக்கல் தற்போது நீங்கிவிட்டது. ரஷ்யாவின் கசானில் கடந்த ஆண்டு நடந்த பிரிக்ஸ் உச்சி மாநாட்டுக்கு இடையே பிரதமர் மோடியும், சீன அதிபர் ஷீ ஜின்பிங்கும் சந்தித்து பேசியதை அடுத்து, இரு நாட்டுக்கும் இடையிலான நல்லுறவு மீண்டும் துளிர்விட்டுள்ளது. அதன் பலனாக எல்லைகளில் மீண்டும் அமைதி நிலவ ஆரம்பித்திருக்கிறது.

75 ஆண்டுகள் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாட்டுக்காக, சீனா வரும் பிரதமர் மோடியை நாங்கள் வரவேற்கிறோம்.

இந்தியா - சீனா இடையே ஆரோக்கியமான நல்லுறவு நீண்ட காலத்திற்கு நீடித்தால் மட்டுமே இரு நாடு களுக்கும் பயன் தரும் என்பதை வரலாறும், யதார்த்தமும் நிரூபித்து வருகின்றன.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த சந்திப்பின்போது பேசிய நம் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், கசானில் இரு நாட்டு தலைவர்களும் சந்தித்த பின், இரு நாடுகளுக்கும் பல நன்மைகள் ஏற்பட்டு வருவதாக அடிக்கோடிட்டு காட்டினார்.

முக்கியமாக, கடந்த ஒன்பது மாதங்களாக எல்லையில் அமைதி மட்டுமே நிலவுகிறது என தெரிவித்தார்.

இது குறித்து மேலும் அவர் கூறியதாவது:

இரு நாட்டு எல்லை பிரச்னை தொடர்பான பேச்சு, கடந்த முறை போலவே வெற்றியுடன் முடிந்திருக்கிறது. இந்தியா - சீனா இடையே துாதரக உறவு மலர்ந்து, 75 ஆண்டுகள் கடந்துள்ளன.

இந்த தருணத்தில், நம் பிரதமர் மோடி ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு உச்சி மாநாட்டுக்காக, வரும் 31ம் தேதி சீனா செல்கிறார். இத்தகைய சூழலில், எல்லை பிரச்னை தொடர்பான பேச்சு வெற்றி அடைந்திருப்பது முக்கியத்துவம் வாய்ந்தது.

நல்லுறவு இந்தியா - சீனா இடையிலான எல்லை பிரச்னையில் நம்பிக்கையை உருவாக்கும் நடவடிக்கைகள் குறித்து, இரு நாட்டு பிரதிநிதிகள் பேச்சின்போது பெரிதாக எதிர்பார்க்கப்பட்டது.

அதன்படி இரு நாடுகளும் எல்லையில் இருந்து படைகளை குறைக்க ஒப்புக் கொண்டுள்ளன. தற்போது கிழக்கு லடாக் பகுதியில், இரு நாடுகளின் சார்பிலும் 50,000 முதல் 60,000 வீரர்கள் வரை நிறுத்தப்பட்டுள்ளனர்.

இந்தியா - சீனா இடையே மீண்டும் நல்லுறவு மேம்பட்டு வருவதால், கைலாஷ் மானசரோவர் புனித யாத்திரைக்கு சீனா மீண்டும் அனுமதி அளித்துள்ளது. அதே போல் சீனர்களுக்கு சுற்றுலா விசாக்கள் வழங்குவதை இந்தியா மீண்டும் துவங்கியுள்ளது. 0இவ்வாறு அவர் கூறினார்.
 

6 நாள்கள் முன்னர்

மரண அறிவித்தல்

RAJADURAI

FRANCE (SARCELLES ), BROWN ROAD KALATDI

வயது : 44

இறப்பு : 14 Aug 2025

  • Ecology

    1

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்