Paristamil Navigation Paristamil advert login

ஓட்டுநர் உரிமமும் காப்பீடும் இல்லாமல் விபத்து ஏற்படுத்தி ஒருவர் உயிரிழப்பு!!

ஓட்டுநர் உரிமமும் காப்பீடும் இல்லாமல் விபத்து ஏற்படுத்தி ஒருவர் உயிரிழப்பு!!

18 ஆவணி 2025 திங்கள் 22:42 | பார்வைகள் : 1698


Aulnay-sous-Bois பகுதியில் ஆகஸ்ட் 18 ஆம் திகதி அதிகாலை 1 மணியளவில், ஒரு மோசமான சாலை விபத்தில் 45 வயதுடைய ஒரு ஆண் உயிரிழந்துள்ளார். அவர் ஓட்டிய Peugeot 206 காரில், ஒரு SUV Hyundai Santa Fe வண்டி நேராக மோதியது. Hyundai டிரைவர், சிவப்பு சிக்னலை மீறி சென்றுள்ளார் என்று விசாரணையில் தெரியவந்துள்ளது. 

வண்டி மோதிய தாக்கம் காரணமாக, பாதிக்கப்பட்டவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். அவர் செவ்ரான் (Sevran) பகுதியைச் சேர்ந்தவராக இருக்கலாம் என கூறப்படுகிறது. விபத்தில் Hyundai வண்டியில் இருந்த டிரைவர் தனது மனைவி மற்றும் மூன்று பிள்ளைகளுடன் பயணித்துள்ளார். அவருக்கு வண்டி ஓட்ட உரிமமும், காப்பீடும் இல்லாமல் இருந்துள்ளது. 

மேலும் அவர் மதுவின் தாக்கத்தில் வண்டி ஓட்டியுள்ளார் என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது அவர்மீது "கடுமையான சாலை கொலை" என்ற வழக்கில் விசாரணை நடக்கிறது, 30 வயது நபர் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

9 நாள்கள் முன்னர்

மரண அறிவித்தல்

RAJADURAI

FRANCE (SARCELLES ), BROWN ROAD KALATDI

வயது : 44

இறப்பு : 14 Aug 2025

  • Ecology

    1

  • Live Link

வர்த்தக‌ விளம்பரங்கள்