பிரதமர் தலைமையில் உயர் மட்ட கூட்டம்: முக்கிய அமைச்சர்கள் பங்கேற்பு

19 ஆவணி 2025 செவ்வாய் 05:44 | பார்வைகள் : 102
பொருளாதார சீர்திருத்தங்கள் குறித்து விவாதிக்க முக்கிய அமைச்சர்கள் பங்கேற்ற உயர்மட்ட கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் டில்லியில் இன்று இரவு நடைபெற்றது.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற உயர் மட்ட கூட்டத்தில், மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, ராஜ்நாத் சிங், நிர்மலா சீத்தாராமன் உள்ளிட்டோர்,செயலாளர்கள் மற்றும் பொருளாதார நிபுணர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். அடுத்த தலைமுறை பொருளாதார சீர்திருத்தங்களுக்கான வழிமுறைகள் குறித்து இக்கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டது.
மேலும் புதிய சீர்திருத்தங்களை வடிவமைக்கவும், உள்நாட்டு மற்றும் உலகளாவிய பொருளாதார சவால்களை சமாளிக்க, அரசு தொழில்துறை, வர்த்தகம் மற்றும் முதலீட்டு கட்டமைப்புகளில் பெரும் மாற்றங்களை கொண்டு வரவும் ஆலோசிக்கப்பட்டது.
இளம் தொழில்முனைவோருக்கான சிறப்பு திட்டங்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.
இந்த கூட்டம், இந்தியாவின் பொருளாதார எதிர்காலத்தை வடிவமைக்கும் ஒரு முக்கியமான படியாகும். உற்பத்தி, டிஜிட்டல் மாற்றம் மற்றும் வேளாண்மை போன்ற துறைகளில் பெரும் முன்னேற்றங்கள் குறித்து விரிவான ஆலோசனை நடத்தப்பட்டது.