Paristamil Navigation Paristamil advert login

Saint-Ouen : இளம் பெண்ணைக் கடத்தி பாலியல் வல்லுறவு! - மூவர் கைது!!

Saint-Ouen : இளம் பெண்ணைக் கடத்தி பாலியல் வல்லுறவு! - மூவர் கைது!!

18 ஆவணி 2025 திங்கள் 16:18 | பார்வைகள் : 4494


இளம் பெண் ஒருவரைக் கடத்தி, அவரை பாலியல் வல்லுறவுக்குட்படுத்திய முவர் கொண்ட குழுவை Saint-Ouen நகர காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

ஓகஸ்ட் 17, நேற்று ஞாயிற்றுக்கிழமை இக்கைது சம்பவம் இடம்பெற்றுள்ளது. அவர்கள் மூவரும் இணைந்து வயது மற்றும் பெயர் குறிப்பிடப்படாத பெண் ஒருவரை, ஓகஸ்ட் 16, சனிக்கிழமை கடத்தியுள்ளனர். மறுநாள் வரை அவர் குறித்த தகவல் இல்லை என்பதை அறிந்த அப்பெணின் தோழி காவல்துறையினரை அழைத்து தகவலை தெரிவித்துள்ளார்.

அதை அடுத்து, விசாரணைகளை மேற்கொண்ட அவர்கள்,  இரண்டுமணிநேரங்களுக்குள்ளாக பெண்ணை மீட்டதோடு, குற்றவாளிகள் மூவரையும் கைது செய்தனர்.

குறித்த பெண் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டிருந்தார் எனவும், அவர் நெதர்லாந்தில் இருந்து பிரான்சுக்கு சுற்றுலா வந்திருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

வர்த்தக‌ விளம்பரங்கள்