Paristamil Navigation Paristamil advert login

கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு செல்பவர்களுக்கு முக்கிய அறிவிப்பு

கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு செல்பவர்களுக்கு முக்கிய அறிவிப்பு

18 ஆவணி 2025 திங்கள் 15:47 | பார்வைகள் : 152


கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் புறப்பாடு முனையத்துக்குள் பயணிகளுடன் வழியனுப்ப செல்பவர்கள் உட்பிரவேசிப்பதனை மட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக விமான நிலைய மற்றும் விமானசேவைகள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

கட்டுநாயக்க விமான நிலையம் (BIA) உச்சநேரங்களில் பயணிகளின் வசதியை உறுதிப்படுத்தவும், நெரிசலை திறம்பட நிர்வகிக்கவும் புதிய நடவடிக்கையை அறிவித்துள்ளது.

அதன்படி, ஒவ்வொரு வியாழக்கிழமை, வெள்ளிக்கிழமை மற்றும் சனிக்கிழமைகளில் இரவு 10:00 மணி முதல் நள்ளிரவு 12:00 மணி வரை, புறப்பாட்டு மண்டபத்திற்கு வருகையாளர்களுக்கான நுழைவு சீட்டுகள் வழங்கப்படாது என அறிக்கை ஒன்றை வௌியிட்டு தெரிவித்துள்ளது.

இந்த நடவடிக்கை பயணிகள் மற்றும் விமான நிலைய பணியாளர்களின் வசதியை உறுதிப்படுத்துவதற்காக அமல்படுத்தப்படுகிறது என விமான நிலைய மற்றும் விமான சேவைகள் (இலங்கை) (பிரைவேட்) லிமிடெட் தெரிவித்துள்ளது.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்