தமிழக எம்பிக்கள் கட்சி பேதமின்றி சி.பி.ராதாகிருஷ்ணனை ஆதரிக்க வேண்டும்; இபிஎஸ்

18 ஆவணி 2025 திங்கள் 13:47 | பார்வைகள் : 144
துணை ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள சி.பி.ராதாகிருஷ்ணனை, தமிழக எம்பிக்கள் ஆதரித்து வெற்றி பெயச் செய்ய வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் வலியுறுத்தியுள்ளார்.
திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் சுவாமி தரிசனம் செய்தார்.
அதன்பிறகு அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது; மஹாராஷ்டிரா கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணன் துணை ஜனாதிபதி தேர்தலில்போட்டியிட வாய்ப்பு கிடைத்துள்ளது. இதனால், தமிழகத்தைச் சேர்ந்த அனைத்து கட்சி எம்பிக்களும், கட்சி பேதமின்றி, சி.பி.ராதாகிருஷ்ணனை ஆதரித்து, அவரை வெற்றி பெறச் செய்யுமாறு அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.
இன்று தமிழகத்திற்கு ஒரு நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது. நாட்டின் துணை ஜனாதிபதியாக தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர் வருவதற்கு ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது. எனவே, கட்சி பேதமின்றி அவரை ஆதரிக்க வேண்டும், இவ்வாறு அவர் கூறினார்.