வெப்பம் தொடர்கிறது... 13 மாவட்டங்களுக்கு செம்மஞ்சள் எச்சரிக்கை!!

18 ஆவணி 2025 திங்கள் 07:00 | பார்வைகள் : 497
கடந்த வாரம் நிலவிய அதிகூடிய வெப்ப அலை, இந்த புதிய வாரத்திலும் தொடர்கிறது. இன்று ஓகஸ்ட் 18, திங்கட்கிழமை நாட்டின் 13 மாவட்டங்களுக்கு செம்மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நாட்டின் தெற்கு மாவட்டங்களில் அதிகூடிய வெப்பம் நிலவும் எனவும், அதிகபட்சமாக 35°C வரை வெப்பம் பதிவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Alpes-de-Haute-Provence, Alpes-Maritimes, Ariège, Aude, Bouches-du-Rhône, Gard, Haute-Garonne, Hérault, Pyrénées-Orientales, Tarn, Tarn-et-Garonne, Var மற்றும் Vaucluse ஆகிய 13 மாவட்டங்களுக்கு செம்மஞ்சள் எச்சரிக்கையும், 16 மாவட்டங்களுக்கு குறைந்த பட்ட மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, மாலை வேளையில், இடி மின்னல் தாக்குதல்கள் பதிவாகவும் வாய்ப்புள்ளதாக வானிலை அவதானிப்பு மையம் எச்சரித்துள்ளது.