20 நாட்களில் €4,000 சம்பாதித்த போலி ஆப்பிள் சாதன வியாபாரி கைது!!
17 ஆவணி 2025 ஞாயிறு 22:16 | பார்வைகள் : 7157
23 வயதான நேபாளி ஒருவர், Claye-Souilly உள்ள வணிக வளாகத்தில் தனது காரில் இருந்து போலியான ஆப்பிள் சாதனங்களை டார்டி (Darty) பெட்டிகளில் வைத்து விற்பனை செய்துள்ளார்.
காவல் துறையினர் அவனைப் பார்வையிட்டபோது, அவன் போலி ஊனமுற்றவர் அட்டையும், போலி பில்லையும் பயன்படுத்தி நம்பிக்கையை ஏற்படுத்த முயன்றதை கண்டனர். கைது செய்யப்பட்ட பிறகு, காவல் துறையினர் தியாய் (Thiais) பகுதியில் ஒரு கிடங்கில் சோதனை செய்து, 166 போலி வாசனை திரவியங்கள் பொருட்கள் மற்றும் 39 போலி தொழில்நுட்ப சாதனங்களை பறிமுதல் செய்துள்ளனர்.
விசாரணையில் அவர் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார். கடந்த 20 நாட்களில் அவர் இந்த மோசடி மூலம் 4,000 யூரோக்கள் சம்பாதித்ததாகவும், Clignancourt மற்றும் Aubervilliers உள்ள சந்தைகளில் இருந்து பொருட்கள் வாங்கியதாகவும் கூறியுள்ளார்.
அவர் மீது ஐந்து மாதங்கள் தவணை சிறைத் தண்டனை மற்றும் மூன்று ஆண்டுகள் Seine-et-Marne பகுதிக்குள் வர தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலுமாக, அவர் கட்டாயமாக பிரான்சை விட்டு வெளியேற வேண்டும் என நிர்வாகம் (La préfecture) உத்தரவிட்டுள்ளது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
14 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
23 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan