Paristamil Navigation Paristamil advert login

கோஹ்லி, பாபருக்கு அடுத்து சாதனைப் பட்டியலில் இணைந்த அமீரக கேப்டன்!

கோஹ்லி, பாபருக்கு அடுத்து சாதனைப் பட்டியலில் இணைந்த அமீரக கேப்டன்!

16 புரட்டாசி 2025 செவ்வாய் 10:56 | பார்வைகள் : 113


டி20யில் வேகமாக 3000 ஓட்டங்களை எட்டியவர்கள் பட்டியலில் ஐக்கிய அரபு அமீரக அணித்தலைவர் முகமது வசீம் இணைந்துள்ளார்.

ஆசியக் கிண்ணத் தொடரின் நேற்றைப் போட்டியில் ஓமன் அணியை, 42 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஐக்கிய அரபு அமீரகம் வீழ்த்தியது.

இப்போட்டியில் அமீரக அணித்தலைவர் முகமது வசீம் (Muhammad Waseem) 54 பந்துகளில் 3 சிக்ஸர், 6 பவுண்டரிகளுடன் 69 ஓட்டங்கள் விளாசினார்.

இதன்மூலம் அவர் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 3000 ஓட்டங்களை கடந்தார். 84 இன்னிங்ஸ்களில் இதனை அவர் எட்டியதன் மூலம் சாதனைப் பட்டியலில் இணைந்துள்ளார்.

 

அதிவேகமாக 3000 ஓட்டங்கள் எடுத்த வீரர்கள்

 

1.மொஹம்மது ரிஸ்வான் (பாகிஸ்தான்) - 79 இன்னிங்ஸ்

 

2.விராட் கோஹ்லி (இந்தியா) - 81 இன்னிங்ஸ்

 

3.பாபர் அசாம் (பாகிஸ்தான்) - 81 இன்னிங்ஸ்

 

4.முகமது வசீம் (ஐ.அ.அமீரகம்) - 84 இன்னிங்ஸ்

 

5.ஆரோன் பின்ச் - 98 இன்னிங்ஸ்

 

 

 

வர்த்தக‌ விளம்பரங்கள்