ஆமிர் கான் - லோகேஷ் கனகராஜ் படம் கைவிடப்பட காரணம் என்ன ?

15 புரட்டாசி 2025 திங்கள் 12:43 | பார்வைகள் : 163
இயக்குனர் லோகேஷ் கனகராஜ், பாலிவுட் நட்சத்திரம் ஆமிர் கானை வைத்து ஒரு சூப்பர் ஹீரோ படம் இயக்கவிருப்பதாக செய்திகள் வெளியாகின. ஆனால், இந்த படம் கைவிடப்பட்டதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. 'கூலி' படத்தில் ஆமிரின் நடிப்புக்கு கிடைத்த எதிர்மறை விமர்சனங்களே இதற்கு காரணம் என்று சமூக வலைதளங்களில் தகவல் பரவியது. ஆனால், இது உண்மையல்ல. லோகேஷின் பணி பாணியில் ஆமிருக்கு உடன்பாடு இல்லை என்பதே உண்மையான காரணம்.
முழுமையான திரைக்கதையை முன்கூட்டியே தயார் செய்ய வேண்டும் என்பது ஆமிரின் விருப்பம். ஆனால், லோகேஷ் படப்பிடிப்பின்போது திரைக்கதையில் மாற்றங்களைச் செய்வதை வழக்கமாகக் கொண்டவர். இந்த கருத்து வேறுபாடு காரணமாகவே படம் கைவிடப்பட்டது. இந்திய சினிமாவையே மாற்றும் வகையிலான கதை லோகேஷிடம் இருப்பதாகவும், ஆனால் திரைக்கதை எழுதுவதில் அவர் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்றும் ஆமிர் கூறியதாக கூறப்படுகிறது. ஆனால், படப்பிடிப்பு தளத்தில் மேம்படுத்தல்களைச் செய்வதே லோகேஷின் பாணி. இந்த கருத்து வேறுபாடு காரணமாகவே தற்போதைக்கு இந்த படம் கைவிடப்பட்டுள்ளது.
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தற்போது தான் ஹீரோவாக நடிக்கும் படத்தில் பிசியாக இருக்கிறாராம். அப்படத்தை அருண் மாதேஸ்வரன் இயக்குகிறார். அப்படத்திற்காக தாய்லாந்து சென்று முறையாக மார்ஷியல் ஆர்ட்ஸ் போன்ற கலைகளை கற்றிருக்கிறாராம் லோகேஷ். அதிரடி ஆக்ஷன் கதையம்சம் கொண்ட படமாக அது தயாராக உள்ளதாம். அப்படத்தில் லோகேஷ் கனகராஜுக்கு ஜோடியாக நடிகை மிர்ணா நடிக்க உள்ளதாக தகவல் பரவி வருகிறது. அப்படத்தின் ஆரம்பக்கட்ட பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
அதுமட்டுமின்றி ஆமிர் கான் நடிக்கும் படம் டிராப் ஆனதை தொடர்ந்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் இணைந்து நடிக்கும் கேங்ஸ்டர் படம் ஒன்றை இயக்க உள்ளதாக கூறப்படுகிறது. அப்படத்தை ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனமும், ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்க உள்ளதாம். அப்படம் குறித்த அறிவிப்பும் விரைவில் வெளிவர இருக்கிறது. இதைத் தொடர்ந்து கைதி 2 படத்தை இயக்க உள்ளாராம் லோகேஷ்.
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025