Paristamil Navigation Paristamil advert login

காசா மீது இஸ்ரேல் தாக்குதல் - 53 பேர் உயிரிழப்பு

காசா மீது இஸ்ரேல் தாக்குதல் - 53 பேர் உயிரிழப்பு

15 புரட்டாசி 2025 திங்கள் 11:25 | பார்வைகள் : 161


காசா மீது 14.09.2025 இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் 53 பேர் உயிரிழந்ததுடன், பல கட்டடங்கள் சேதமாக்கப்பட்டுள்ளன.

காசா நகரத்தின் மீது இஸ்ரேல் தனது குண்டுவீச்சு தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தாக்குதலிக்போது, மூன்று கோபுரங்கள் உட்பட 16 கட்டிடங்கள் தரைமட்டமாக்கியுள்ளன.

மேலும், இந்த தாக்குதல்களில் பல மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வடக்கு நகர்ப்புற மையத்தைக் கைப்பற்றி அதன் மக்களை இடம்பெயரச் செய்வதற்கான தாக்குதலை இஸ்ரேலியப் படைகள் தீவிரப்படுத்தியுள்ள நிலையில், காசா பகுதியில் 53 பாலஸ்தீனியர்களைக் கொல்லப்பட்டுள்ளனர்

இஸ்ரேலின் போர் தொடங்கியதிலிருந்து, காசாவில் பசியிலினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 422 ஆக உயர்ந்துள்ளதாக அந்த நாட்டு சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

காசா நகரில், இஸ்ரேலிய இராணுவம் தெற்கு ரெமால் சுற்றுப்புறத்தில் உள்ள அல்-கவ்தர் கோபுரத்தை இலக்குவைத்து, இரண்டு மணி நேரம் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியுள்ளது.

இடைவிடாத குண்டுவீச்சு தாக்குதல்களால் பல்லாயிரக்கணக்கானவர்கள் தப்பி ஓடியுள்ளனர்.

 

 

வர்த்தக‌ விளம்பரங்கள்