Paristamil Navigation Paristamil advert login

சீகிரிய கண்ணாடி சுவற்றில் கிறுக்கிய இளம் பெண்ணும் கைது

சீகிரிய கண்ணாடி சுவற்றில் கிறுக்கிய இளம் பெண்ணும் கைது

15 புரட்டாசி 2025 திங்கள் 10:25 | பார்வைகள் : 153


உலக பாரம்பரிய தளமான சீகிரியாவை பார்வையிட சென்ற இளம் பெண் ஒருவர் நேற்று (14) சீகிரிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கண்ணாடி சுவரை சேதப்படுத்தும் வகையில் கிறுக்கியதாக குற்றம் சாட்டப்பட்ட நிலையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவிசாவளையை சேர்ந்த 21 வயதுடைய இளம் பெண்ணொருவர் மேலும் சிலருடன் சீகிரியாவுக்குச் சென்றிருந்தபோது இந்தச் செயலைச் செய்துள்ளார்.

ஏற்கனவே, இதேபோன்று சீகிரிய கண்ணாடி சுற்றில் கிறுக்கிய குற்றச்சாட்டில் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
 

வர்த்தக‌ விளம்பரங்கள்