ஆரோக்கிய நன்மைகளை அள்ளித்தரும் குடம் புளி!
14 புரட்டாசி 2025 ஞாயிறு 18:40 | பார்வைகள் : 1196
உணவுக்கு புளிப்பு சுவையை கொடுக்க பயன்படும் புளியின் வகைகளுள் பழமையான ஒன்றான குடம் புளி, பல ஆரோக்கிய நன்மைகளை கொண்டிருக்கிறது. குடம் புளியில் ஹைட்ராக்ஸி சிட்ரிக் அமிலம் என்னும் பைட்டோ கெமிக்கல்கள் அதிக அளவில் உள்ளன. இந்த கெமிக்கல், உடலில் கொழுப்பை சேர்ப்பதற்கு காரணமாக இருக்கும் 'சிட்ரேட் லைஸ்' என்ற நொதியின் செயல்பாட்டை தடுக்கிறது.
குடம் புளியை உணவில் சேர்த்துக்கொள்வதன் மூலம் கிடைக்கும் பிற முக்கிய நன்மைகளையும் பார்ப்போம்:வயிறு மற்றும் இன்சுலின் கட்டுப்பாடு: இது வயிறு வீக்கத்தைக் குறைக்கவும், உடலில் உள்ள இன்சுலின் அளவைச் சீராகப் பராமரிக்கவும் உதவுகிறது.
சர்க்கரை அளவு: இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது.செரிமானம்: செரிமான மண்டலத்தின் செயல்பாட்டைத் தூண்டி, உணவு எளிதாகச் செரிக்க உதவுகிறது.
மன ஆரோக்கியம்: மகிழ்ச்சிக்குக் காரணமான ஹார்மோன்களை வெளியிட உதவுவதன் மூலம் மன ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.இதயம் மற்றும் எலும்புகள்: இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், உடலில் உள்ள தேவையற்ற நச்சுக்களை வெளியேற்றவும், எலும்புகளை வலுப்படுத்தவும் துணைபுரிகிறது.


























Bons Plans
Annuaire
Scan