சிக்கன் பக்கோடா...

14 புரட்டாசி 2025 ஞாயிறு 18:40 | பார்வைகள் : 114
சண்டே வந்தாலோ அல்லது மழை பெய்தாலோ சூடான சுவையான சிக்கன் 65 சாப்பிட வேண்டும் என்று நம்மில் ஒவ்வொருவருக்குமே தோன்றும். அதிலும் குழந்தைகளிலிருந்து பெரியவர்கள் என அனைவரும் வீட்டில் செய்யும் சிக்கனை விட ரோட்டு கடை சிக்கன் பிடித்து போய் இருக்கும். ஆனால் அதில் என்னதான் சேர்க்கிறார்கள் என்று பல பேருக்கு தெரியாமல் இருக்கலாம். ஆனால் ரோட்டு கடையில் செய்யக்கூடிய அதே ஸ்டைலில் ரோட்டு கடை பக்கோடா ஆரோக்கியமான முறையில் வீட்டிலேயே எப்படி செய்யலாம் என்பது குறித்து இச்செய்தி தொகுப்பில் தெரிந்து கொள்வோம்.
இதற்கு தேவையான பொருட்கள் என்னவென்றால், 500கி சிக்கன், 2ஸ்பூன் கடலை மாவு, 2ஸ்பூன் கார்ன் பிளார், 1ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது, 1ஸ்பூன் மிளகாய் தூள், 1ஸ்பூன் கரம் மசாலா தூள், சிறிதளவுஃபுட் கலர், தேவையானஅளவு உப்பு, பொரிப்பதற்கு எண்ணெய் ஆகியவற்றை எடுத்துக் கொள்ள வேண்டும்.
பிறகு ஒரு அகண்ட சட்டியில் எண்ணெயைத் தவிர கடலை மாவு, கான்ஃபிளார், இஞ்சி பூண்டு விழுது, மிளகாய் தூள், கரம் மசாலா தூள், என இதற்கு தேவையான அனைத்து பொருட்களையும் ஒன்றாக சேர்த்து சிறிதளவு தண்ணீர் ஊற்றி கரைத்து வைத்துக் கொள்ள வேண்டும். இதில் குறிப்பாக அதிகம் தண்ணீர் சேர்க்கக்கூடாது.. கெட்டியான பதத்திற்கு கரைத்துக் கொள்ளவும்..
பின்பு கடையில் எலும்பு மற்றும் தோலுடன் வாங்கிய சிக்கனை நன்றாக மஞ்சள் தூள் உப்பு போன்றவற்றை போட்டு கழுவி வைத்த சிக்கனை இந்த மசாலாவில் சேர்த்து இரண்டிலிருந்து நான்கு மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.
பிறகு ஒரு கடாயில் எண்ணெயை ஊற்றி என்னை சூடான பிறகு நாம் ஊற வைத்த சிக்கனை போட்டு பொறிக்க வேண்டும். இதற்கு இடையில் கருவேப்பிலையும் எண்ணெயில் தூவி விட வேண்டும். பொன்னிறமாக வரும் வரை சிக்கனை எடுத்து பார்த்தால் ரோட்டு கடையில் செய்யும் சிக்கன் பக்கோடாவை போல அச்சு அசலான சிக்கன் பகோடா தயாராகிவிடும்.
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025