Paristamil Navigation Paristamil advert login

ஜனநாயகன் படம் எப்படி இருக்கு?

ஜனநாயகன் படம் எப்படி இருக்கு?

14 புரட்டாசி 2025 ஞாயிறு 18:40 | பார்வைகள் : 174


தளபதி விஜய் நடிக்கும் ‘ஜனநாயகன்’ படம் மிகுந்த எதிர்பார்ப்பில் உருவாகி வருகிறது. இயக்குநர் ஹெச்.வினோத் இயக்கும் இந்தப் படம், விஜயின் கடைசி நடிகர் என்பதால் ரசிகர்களிடையே பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தி உள்ளது. 2026 பொங்கலை முன்னிட்டு ஜனவரி 9ஆம் தேதி வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. இந்த வெளியீட்டிற்கு நிறைய நேரம் இருந்தாலும், படம் தொடர்பான தகவல்கள் ஒவ்வொரு நாளும் வைரலாகி, எதிர்பார்ப்பை அதிகரிக்கின்றன.

ஜனநாயகன் படம் அரசியல் பின்னணியில் உருவாகும் ஆக்ஷன் என்டர்டெய்னராக உருவாகி உள்ளது என்று கூறப்படுகிறது. நடிகர் தளபதி விஜய், போலீஸாக இருந்து பின்னர் அரசியல்வாதியாக மாறும் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என தகவல் வெளியாகியுள்ளது. பாலிவுட் நடிகர் பாபி டியோல் வில்லனாக நடிக்க, பூஜா ஹெக்டே, பிரகாஷ் ராஜ், பிரியாமணி, கௌதம் மேனன், ரேவதி, மமிதா பைஜு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் இசையமைக்கும் இந்த படம், விஜயுடன் அவரது ஐந்தாவது கூட்டணி ஆகும். முந்தைய படங்களில் போலவே, அனிருத் இசை ரசிகர்களை கவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில், போஸ்ட் ப்ரொடக்சன் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன.

2026 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வருகின்ற ஜனவரி 9ஆம் தேதி ஜனநாயகன் திரைக்கு வரும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதேபோல நடிகர் சிவகார்த்திகேயனின் பராசக்தி படத்தை வரும் பொங்கல் பண்டிகைக்கு வெளியாக உள்ளது. ஜனவரி 14ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் சமீபத்தில், ஜனநாயகன் படத்தின் எடிட்டர் பிரதீப் ராகவ் அளித்த பேட்டியில், "ஜனநாயகன் பற்றி நான் இப்போது ஏதாவது சொன்னால், எனக்கு வேலை போய்விடும். இதில் சொல்லிக்கொள்ள நிறைய சுவாரஸ்யங்கள் உள்ளன. விஜய் சாரின் விஜயிசம் 100% படம் முழுவதும் இருக்கும். அதற்கான பல தருணங்கள் ரசிகர்களை கவர்வதற்காக காத்திருக்கின்றன" என்று கூறியுள்ளார். இந்த தகவல் விஜய் ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

வர்த்தக‌ விளம்பரங்கள்