பிக் பாஸ் நிகழ்ச்சியின் 9-வது சீசன் எப்போது?

14 புரட்டாசி 2025 ஞாயிறு 17:40 | பார்வைகள் : 174
பிக் பாஸ் நிகழ்ச்சி தமிழில் கடந்த 2017-ம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது. இதுவரை 8 சீசன்கள் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டு உள்ளன. இதில் முதல் சீசனில் ஆரவ், இரண்டாவது சீசனில் ரித்விகா, மூன்றாவது சீசனில் முகென் ராவ், நான்காவது சீசனில் ஆரி, ஐந்தாம் சீசனில் ராஜு, ஆறாவது சீசனில் அசீம், ஏழாவது சீசனில் அர்ச்சனா, எட்டாவது சீசனில் முத்துக்குமரன் ஆகியோர் டைட்டில் வின்னராக தேர்வு செய்யப்பட்டனர். இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியின் 9-வது சீசன் அமர்க்களமாக ஆரம்பமாக உள்ளது. அதன் புரோமோ வீடியோவும் அண்மையில் ரிலீஸ் ஆகி வைரல் ஆனது.
பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சியில் யார் யாரெல்லாம் கலந்துகொள்ளப் போகிறார்கள் என்கிற எதிர்பார்ப்பு ஒரு புறம் இருக்க, மறுபுறம் அந்நிகழ்ச்சி எப்போது ஆரம்பமாகும் என்பதை தெரிந்துகொள்ள ரசிகர்கள் மிகவும் ஆவலோடு இருக்கிறார்கள். இந்நிலையில், பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி தொடங்கும் தேதியை மக்கள் செல்வன் விஜய் சேதுபதி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். அதன்படி வருகிற அக்டோபர் மாதம் 5ம் தேதி தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. அக்டோபர் மாதம் தொடங்கும் இந்நிகழ்ச்சி 2026-ம் ஆண்டு ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகையுடன் முடிவுக்கு வரும்.
பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சியில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக உள்ள உமைர் கலந்துகொள்ள அதிகம் வாய்ப்பு உள்ளதாம். அதேபோல் சின்னத்திரை சீரியல் நடிகை ஜனனி அசோக்குமாரும் ஒரு போட்டியாளராக களமிறங்க வாய்ப்பு இருக்கிறது. மேலும் விஜே ஷோபனா, பாக்கியலட்சுமி சீரியல் நடிகை நேஹா, இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா, சீரியல் நடிகர் யுவன் மயில்சாமி மற்றும் புவி அரசு, கலக்கப்போவது யாரு ராஜவேலு ஆகியோர் இந்நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொள்ள அதிக வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது.
பிக் பாஸ் நிகழ்ச்சி என்றாலே அதை தொகுத்து வழங்கும் நடிகர்களுக்கு அதிகளவில் சம்பளம் வாரி வழங்கப்படும். இதற்கு முன்னர் இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய கமல்ஹாசன் 100 கோடிக்கு மேல் சம்பளம் வாங்கினார். பின்னர் வந்த விஜய் சேதுபதிக்கு கடந்த சீசனை தொகுத்து வழங்க ரூ.50 கோடி சம்பளமாக வழங்கப்பட்டது. இந்த நிலையில், பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சிக்காக அவர் தன்னுடைய சம்பளத்தை உயர்த்தி இருக்கிறார். அதன்படி இந்த சீசனுக்காக விஜய் சேதுபதிக்கு ரூ.75 கோடி சம்பளமாக வழங்கப்பட உள்ளதாம்.
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025