இலங்கையில் அச்சுறுத்தும் வெப்பநிலை தொடர்பில் எச்சரிக்கை
14 புரட்டாசி 2025 ஞாயிறு 16:56 | பார்வைகள் : 1691
இலங்கையில் அச்சுறுத்தும் வெப்பநிலை தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வெப்பமான வானிலை நிலைமைகள் குறித்து அவதானம் செலுத்துமா வளிமண்டலவியல் திணைக்களத்தால் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இன்று (14) பிற்பகல் 03.00 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த எச்சரிக்கை அறிவிப்பு நாளை (15) வரை செல்லுபடியாகும் என்று அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்கள் மற்றும் மொனராகலை மாவட்டத்தின் சில பகுதிகளிலும் வெப்பக் குறியீடு, அதாவது மனித உடலால் உணரப்படும் வெப்பநிலை, "எச்சரிக்கை" மட்டத்தில் இருக்கக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan