Paristamil Navigation Paristamil advert login

150வது போட்டியில் களமிறங்கிய கேப்டன்!

150வது போட்டியில் களமிறங்கிய கேப்டன்!

14 புரட்டாசி 2025 ஞாயிறு 12:18 | பார்வைகள் : 1920


அவுஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் களமிறங்கியதன் மூலம், இந்திய அணிக்காக 150வது போட்டியில் விளையாடும் மூன்றாவது வீராங்கனை எனும் பெருமையை பெற்றார் ஹர்மன்பிரீத் கவுர்.

 

இது இந்திய அணித்தலைவர் ஹர்மன்பிரீத் கவுருக்கு (Harmanpreet Kaur) 150வது ஒருநாள் போட்டியாகும்.

 

இதன்மூலம் இந்திய அணிக்காக 150வது போட்டியில் விளையாடும் மூன்றாவது வீராங்கனை எனும் சிறப்பை பெற்றுள்ளார்.

 

இதற்கு முன் மித்தாலி ராஜ் (Mithali Raj) மற்றும் ஜுலன் கோஸ்வாமி (Jhulan Goswami) ஆகியோர் மட்டுமே 150 போட்டிகளுக்கு மேல் விளையாடியுள்ளனர்.

 

இந்திய அணிக்காக அதிக ஒருநாள் போட்டியில் விளையாடிய வீராங்கனைகள்

 

மித்தாலி ராஜ் - 232 போட்டிகள்

ஜுலன் கோஸ்வாமி - 204 போட்டிகள்

ஹர்மன்பிரீத் கவுர் - 150 போட்டிகள்

அஞ்சும் சோப்ரா - 127 போட்டிகள்

அமிதா ஷர்மா - 116 போட்டிகள்

வர்த்தக‌ விளம்பரங்கள்