’ONE IN ONE OUT' ஒப்பந்தம்! - அகதிகளை ஏற்றிக்கொண்டு முதலாவது படகு பிரான்சுக்கு திரும்புகிறது!!

14 புரட்டாசி 2025 ஞாயிறு 11:37 | பார்வைகள் : 469
பிரான்ஸ்-பிரித்தானியா போட்டுக்கொண்ட உள்ளே வெளியே ஒப்பந்தம் ("un pour un”) வரும் வாரத்தில் நடைமுறைக்கு வர உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பிரான்சில் இருந்து உத்தியோகபூர்வமாக ஒரு குடியேற்றவாதியை பிரித்தானியா பெற்றுக்கொண்டால், அதற்கு பதிலாக பிரான்ஸ் ஒரு குடியேற்றவாதியை மீள பெற்றுக்கொள்ளும். பிரித்தானியா குடியேற்றவாதிகளை பெறும்போது அங்கு அவர்களின் குடும்பத்தினரோ அல்லது, குற்றச்செயல்களில் தொடர்பில்லாத, குடியேற தகுதியுடையவராகவோ இருப்பார் என தெரிவிக்கப்படுகிறது.
கடந்த ஜூலையில் ஜனாதிபதி மக்ரோன் பிரித்தானியா சென்றிருந்தபோது இந்த ஒப்பந்ததில் கைச்சாத்திட்டிருந்தனர்.
இந்நிலையில், முதலாவது ‘பரிமாற்றம்’ வரும் சனிக்கிழமை இடம்பெற உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பிரெஞ்சு அரசியல் தரப்பு இந்த ஒப்பந்தத்துக்கு எதிராக பெரும் போர்க்கொடியை தூக்கியுள்ளனர். குடியேற்றவாதிகளை சுத்திகரித்து பெற்றுக்கொண்டு, குற்றவாளிகளை பிரான்சில் தள்ளுகிறது இந்த ஒப்பந்தம் என விமர்சிக்கப்பட்டுள்ளது.
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025