துணை ஜனாதிபதி தேர்தலில் மாற்றி ஓட்டளித்த திமுக எம்பிக்கள்: காங்கிரஸ் புகாரால் ஸ்டாலின் கோபம்

14 புரட்டாசி 2025 ஞாயிறு 10:40 | பார்வைகள் : 139
துணை ஜனாதிபதி தேர்தலில், தமிழகத்தைச் சேர்ந்த சி.பி. ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்று பதவியில் அமர்ந்துவிட் டார். ஆனால், இந்த தேர்தல் முடிவுகள் தி.மு.க.,விற்கும், காங்கிரசுக்கும் இடையே புகைச்சலை ஏற்படுத்தியுள்ளது. ராதாகிருஷ்ணனுக்கு தேசிய ஜனநாயகக் கூட்டணி சார் பாக, 438 ஓட்டுகள் கிடைத்திருக்க வேண்டும்; ஆனால் 452 ஓட்டுகள் கிடைத்தன. எதிர்த்து நின்ற உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி சுதர்ஷன் ரெட்டிக்கு கிடைத்தது, 300 ஓட்டுகள்; இதில், 15 செல்லாதவை.
இண்டி கூட்டணியிலிருந்து யார் ராதாகிருஷ்ணனுக்கு ஓட்டளித்தது? உத்தவ் தாக்கரேவின் சிவசேனா, தி.மு.க., மற் றும் திரிணமுல் காங்., - எம்.பி.,க்கள் ராதாகிருஷ்ணனுக்கு ஓட்டளித்து விட்டனர். 'அத்துடன், எங்கள் கூட்டணி எம்.பி.,க்கள் வேண்டு மென்றே செல்லாத ஓட்டுகள் அளித்து விட்டனர்' என, சில தலைவர்களிடம் சொன்னாராம் காங்கிரஸ் மூத்தத் தலைவர் ஜெய்ராம் ரமேஷ்.
இது, தி.மு.க., தலைமைக்கு தெரிய கோபமடைந்த வந்ததும் மிகவும் முதல்வர் ஸ்டாலின், உடனடியாக காங்., தலைமைக்கு போன் செய்து, 'தி.மு.க.,விலிருந்து யாரும் மாறி ஓட்டளிக்கவில்லை; எதற்கு இப் படி தேவையில்லாத பிரச்னையை ஜெய்ராம் கிளப்புகிறார்' என புகார் அளித்தார்கள். அதன்பின், வாயை மூடிக்கொண்டாராம் ஜெய்ராம்.
'தன் இஷ்டத்திற்கு சமூக வலைதளங்களில், 'டுவிட்' செய்து கொண்டிருக்கிறார் ஜெய்ராம்.இவருக்கும், காங்., தலைமைக்கும் உறவு சரியில்லை' என்கின்றனர் காங்கிரசார். இருப்பினும், -'தி.மு.க., எம்பிக்கள் தான் ராதாகிருஷ்ணனுக்கு ஓட்டளித்தனர் என்ற தன் நிலைப்பாட்டை, ஜெய்ராம் மாற்றிக் கொள்ளவில்லையாம்.
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025