தி.மு.க.,விற்கும், சமூக நீதிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை: அன்புமணி

14 புரட்டாசி 2025 ஞாயிறு 08:40 | பார்வைகள் : 130
தி.மு.க.,விற்கும், சமூக நீதிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை,'' என, பா.ம.க., தலைவர் அன்புமணி கூறினார்.
விருத்தாசலத்தில் நடந்த தமிழக மக்கள் உரிமை மீட்பு நடைபயணத்தில், பா.ம.க., தலைவர் அன்புமணி பங்கேற்றார். பின், பாலக்கரையில் நடந்த பொதுக் கூட்டத்தில் அவர் பேசியதாவது:
கடலுார் மாவட்டத்தில் உள்ள இரு அமைச்சர்கள், என்.எல்.சி., நிறுவனத்திற்காக மக்களிடம் இருந்து நிலத்தை பறித்து கொடுக்கும் புரோக்கர்களாக செயல்படுகின்றனர்.
நேபாளத்தில் ஆட்சி மாற்றம் நடந்துள்ளது. அதேபோல், தமிழகத்திலும் விரைவில் ஆட்சி மாற்றம் நடக்கும். நேபாள மக்களை போல, ஆட்சியாளர்கள் மீது கடும் கோபத்தில் தமிழக மக்கள் உள்ளனர்.
தமிழகத்தில் கல்வித்துறை நாசமாகி விட்டது. 15 ஆண்டுகளுக்கு முன், அரசு பள்ளியில் 75 லட்சம் மாணவர்கள் பயின்றனர். ஆனால், தற்போது 52 லட்சம் மாணவர்கள் மட்டுமே படிக்கின்றனர்.
தி.மு.க.,விற்கும், சமூக நீதிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. தி.மு.க., சமூக நீதிக்கு எதிரி. ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்தால், எங்களுக்கு அதிகாரம் இல்லை என்று முதல்வர் ஸ்டாலின் பொய் கூறுகிறார்.
இருக்கும் அதிகாரத்தை இல்லை என்று சொல்பவர் கோழை. அதிகாரம் இல்லை என்றாலும், அதிகாரம் உள்ளது என்று கூறுபவர் தான் வீரன். பழைய ஓய்வூதிய திட்டத்தை நிறைவேற்றாததால், அரசு ஊழியர்கள் தி.மு.க., அரசு மீது பெரும் கோபத்தில் உள்ளனர்.
வன்னியர் இட ஒதுக்கீட்டை நிறைவேற்ற வலியுறுத்தி, விரைவில் சிறை நிரப்பும் போராட்டத்தை பா.ம.க., சார்பில் நடத்தப் போகிறோம். அதில், 5 லட்சம் பேர் பங்கேற்பர். இவ்வாறு அவர் பேசினார்.
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025