Paristamil Navigation Paristamil advert login

நாசாவில் பணிபுரிய சீனர்களுக்கு தடை

நாசாவில் பணிபுரிய சீனர்களுக்கு தடை

14 புரட்டாசி 2025 ஞாயிறு 06:41 | பார்வைகள் : 190


நாசாவில் பணிபுரிய சீனர்களுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.

ஜப்பான் மற்றும் ஐரோப்பிய நாடுகள் இணைந்து உருவாக்கிய உலகின் முன்னணி விண்வெளி ஆராய்ச்சி நிலையமான நாசா அமெரிக்காவில் அமைந்துள்ளது.

விண்வெளி ஆராய்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கும் நாசா நிலவு மற்றும் செவ்வாய் கிரகத்துக்கு மனிதர்களை அனுப்புவதில் தீவிரம் காட்டி வருகிறது.

இதற்கிடையே செவ்வாய் கிரகம், நிலவுக்கு மனிதர்களை அனுப்ப சீனாவும் ரஷியாவுடன் இணைந்து போட்டி போடுகிறது.

எனவே இந்த திட்டம் தொடர்பான ரகசியங்கள் தெரிந்துவிடாமல் இருப்பதற்காக நாசாவில் பணிபுரிய சீனர்களுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. 

அமெரிக்க விசா வைத்திருந்தாலும் சீனராக இருந்தால் அவர்களுக்கும் இந்த தடை பொருந்தும்.

அதேசமயம் ஆராய்ச்சி மாணவராக அவர்கள் தொடரலாம் என நாசா தெரிவித்துள்ளது. இது நாசாவில் பணிபுரிவதற்கான தங்களது உரிமையை பறிக்கும் செயல் என சீனா குற்றம் சுமத்தி்யுள்ளது.

 

 

வர்த்தக‌ விளம்பரங்கள்