Paristamil Navigation Paristamil advert login

கட்டுநாயக்க விமான நிலையத்தில் பெருந்தொகை போதை பொருளுடன் சிக்கிய நபர்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் பெருந்தொகை போதை பொருளுடன் சிக்கிய நபர்

13 புரட்டாசி 2025 சனி 18:32 | பார்வைகள் : 170


பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் சுமார் ரூ. 8 கோடி 50 இலட்சம் பெறுமதியான குஷ் ரக போதைப்பொருளுடன் வெளிநாட்டவர் ஒருவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

33 வயதுடைய இந்திய பிரஜையான குறித்த சந்தேகநபர், காவல்துறை போதைப்பொருள் தடுப்புப் பணியக அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.

அவரிடமிருந்து 8.54 கிலோகிராம் நிறையுடைய ‘குஷ்’ ரக போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

தாய்லாந்திலிருந்து பிரவேசித்த சந்தேகநபர், இந்தியாவுக்கு இந்தப் போதைப்பொருளை கடத்த முயன்றதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

வர்த்தக‌ விளம்பரங்கள்