காசாவில் மனிதாபிமான உதவிகளுக்காக காத்திருந்தவர்கள் மீது இஸ்ரேல் தாக்குதல்
13 புரட்டாசி 2025 சனி 16:33 | பார்வைகள் : 1541
காசாவில் குடியிருப்பு கட்டிடம் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
காசாவின் யர்மோக் பகுதியில் அமைந்துள்ள குடியிருப்பு கட்டிடங்கள் மீது இஸ்ரேலிய இராணுவத்தினர் வான்வழித் தாக்குதலை நடத்தியுள்ளனர்.
அத்துடன் மத்திய காசாவின் நெட்சாரிம் சந்திப்பு பகுதிக்கு அருகே மனிதாபிமான உதவிகளை தேடிச் சென்றவர்கள் மீதும் இஸ்ரேல் பாதுகாப்பு படை துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தி இருப்பதாக அல் ஜசீரா தகவல் தெரிவித்துள்ளது.
இதில் எத்தனை பேர் கொல்லப்பட்டனர் மற்றும் எத்தனை பேர் காயமடைந்துள்ளனர் என்பது குறித்த தகவல் கிடைக்கவில்லை.
ஆனால் இந்த தாக்குதலானது, ஹமாஸ் தலைவர்களை குறிவைத்து கத்தார் மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதலை நடத்திய பிறகு நிகழ்ந்துள்ளது.
இஸ்ரேலின் இந்த தாக்குதலுக்கு பல்வேறு சர்வதேச நாடுகளும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan