வடகொரியாவில் படங்கள் பார்த்தால் மரண தண்டனை விதிக்கும் நாடு - ஐ.நா அதிர்ச்சி அறிக்கை
13 புரட்டாசி 2025 சனி 16:33 | பார்வைகள் : 834
உடை உடுத்துவது தொடங்கி சிகை அலங்காரம் வரை மக்களுக்கு பல்வேறு கடுமையான கட்டுப்பாடுகள் வடகொரியா விதித்துள்ளது.
அங்கு மக்களின் ஸ்மார்ட்போன்களை கூட அரசு கண்காணிப்பதாகவும், காதலரை குறிக்கும் OPPO என்ற வார்த்தையை வடகொரியாவில் டைப் செய்தால், அதுவாகவே Comrade என மாறிவிடும் என கூறப்படுகிறது.
இந்நிலையில், வெளிநாட்டு தொலைக்காட்சித் தொடர்களை பார்க்கும் மக்களை வடகொரியா ஏற்கனவே தூக்கிலிட்டுள்ளதாக ஐநா அறிக்கை தெரிவித்துள்ளது.
ஜெனீவாவில் நேற்று நடைபெற்ற ஐநா மனித உரிமை கவுன்சிலில், ஐநா மனித உரிமைகள் ஆணையம் இது தொடர்பான 14 பக்க அறிக்கையை வெளியிட்டது.
2014 ஆம் ஆண்டு முதல் வடகொரியாவில் இருந்து தப்பி வந்த 300க்கும் அதிகமான மக்களிடம் நேர்காணல் செய்யப்பட்டு இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிக்கையின் படி, 2015 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட கொள்கைகள் மற்றும் சட்டங்கள் மூலம், மக்கள் அதிகளவில் கட்டுப்பாடுக்கு உள்ளாகியுள்ளனர்.
நிலக்கரிச் சுரங்கம் மற்றும் கட்டுமானம் போன்ற கடினமான துறைகளுக்கு, சில நேரங்களில் குழந்தைகள் கட்டாய வேளைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
கோவிட்-19 காலத்திற்கு பின்னர், பொதுமக்கள் மற்றும் அரசியல் குற்றங்களுக்கு மரண தண்டனைகள் அதிகரித்துள்ளது.
தென் கொரியாவின் கே டிராமாக்கள் உள்ளிட்ட வெளிநாட்டு தொடர்களை பார்க்கும் மற்றும் விநியோகிக்கும் மக்கள் குறிப்பிடப்படாத எண்ணிக்கையில் தூக்கிலிடப்பட்டுள்ளனர் என தெரிவித்துள்ளது.
ஆனால், ஐநாவின் இந்த அறிக்கையை வடகொரியா அரசு நிராகரித்துள்ளது.


























Bons Plans
Annuaire
Scan