காங்கோவில் நடு கடலில் கவிழ்ந்த படகு - 86 போ் உயிரிழப்பு
13 புரட்டாசி 2025 சனி 16:33 | பார்வைகள் : 3267
மேற்கு-மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோவில் படகு கவிழ்ந்து விபத்துக்குளானதில் 86 போ் உயிரிழந்தனர்.
உயிரிழந்தவா்களில் பெரும்பாலானவா்கள் மாணவா்கள் என்று காங்கோ அரசுக்குச் சொந்தமான செய்தி நிறுவனம் கூறியது. இந்த விபத்துக்கான காரணம் குறித்து உடனடி தகவல் இல்லை.
இருந்தாலும், அளவுக்கு அதிகமாக பயணிகளை ஏற்றிச் சென்றதும், இரவு நேரத்தில் போதிய வெளிச்சமின்றி அந்த விசைப் படகு இயக்கப்பட்டதும் விபத்துக்குக் காரணமாக இருக்கலாம் என்று அதிகாரிகள் கூறினா்.
இது போன்ற காரணங்களால் காங்கோவில் அடிக்கடி படகு விபத்துகள் நேரிடுகின்றன.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan