போலந்து வான்வெளி எல்லைக்குள் ரஷ்ய ட்ரோன்கள் - NATO அதிரடி நடவடிக்கை

13 புரட்டாசி 2025 சனி 16:33 | பார்வைகள் : 176
போலந்து வான்வெளி எல்லைக்குள் ரஷ்ய ட்ரோன்கள் நுழைந்ததையடுத்து, NATO அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளது.
ரஷ்யாவின் 21 ட்ரோன்கள் போலந்து நாட்டின் வான்வெளி எல்லையை மீறி நுழைந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதற்கு பதிலளிக்க NATO, தனது கிழக்கு எல்லையை பாதுகாக்கும் வகையில் Eastern Sentry எனும் புதிய பாதுகாப்பு நடவடிக்கையை தொடங்கியுள்ளது.
இந்த நடவடிக்கை NATO உறுப்பினரான நாடுகளின் பாதுகாப்பு உறுதியை வலுப்படுத்தும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்டுள்ளது.
ரஷ்யாவின் நடவடிக்கைகள் ஆபத்தானதாகவும் ஏற்க முடியாததாகவும் இருப்பதாக NATO பொதுச்செயலாளர் மார்க் ரூட்டே கூறியுள்ளார்.
நேட்டோவின் இந்த நடவடிக்கையின் கீழ், பல உறுப்பு நாடுகளிலிருந்து அனுப்பப்படுகின்றன.
டென்மார்க்கில் இருந்து F-16 விமானங்கள் மற்றும் ஒரு Frigate கப்பல், பிரான்சில் இருந்து 3 Rafale ஜெட்கள், ஜேர்மனியில் இருந்து 4 Eurofighter-கள் உள்ளிட்டவை இதில் அடங்கும்.
இப்படை, வடக்கு திசையிலிருந்து மத்திய தரைக்கடல் வரை நேட்டோவின் கிழக்கு எல்லையை முழுமையாக பாதுகாக்கும்.
"ரஷ்யாவின் இந்த ட்ரோன் தாக்குதல் தவறுதலாக நடந்தது இல்லை, நாங்கள் அதை நன்றாகவே அறிவோம்" என போலந்து பிரதமர் டொனால்டு ட்ஸ்க் தெரிவித்துள்ளார்.
அதேசமயம் ரஷ்யாவின் தரப்பில், " இந்த ட்ரோன்கள் போலந்து வரை செல்லும் திறன் இல்லை" என குற்றச்சாட்டிற்கு மறுப்பு தெரிவித்துள்ளது.
11 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025