இலங்கையை நோக்கி படையெடுக்கும் வெளிநாட்டவர்கள்
13 புரட்டாசி 2025 சனி 15:33 | பார்வைகள் : 1856
2025 ஆம் ஆண்டின் செப்டெம்பர் மாதத்தின் முதல் 10 நாட்களில் 52,246 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
செப்டெம்பர் மாதத்தின் முதல் 7 நாட்களில் அதிகளவான சுற்றுலாப் பயணிகள் இந்தியாவிலிருந்து வருகை தந்துள்ள நிலையில் அவர்களின் மொத்த எண்ணிக்கை 14,300 ஆகும்.
அத்துடன், ஐக்கிய இராச்சியத்திலிருந்து 4,092 சுற்றுலாப் பயணிகளும், ஜெர்மனியிலிருந்து 3,488 சுற்றுலாப் பயணிகளும், சீனாவிலிருந்து 2,796 சுற்றுலாப் பயணிகளும், அவுஸ்திரேலியாவிலிருந்து 2,603 சுற்றுலாப் பயணிகளும், நெதர்லாந்திலிருந்து 1,984 சுற்றுலாப் பயணிகளும் நாட்டுக்கு வருகை தந்துள்ளனர்.
அதன்படி, 2025 ஆம் ஆண்டின் ஜனவரி மாதம் முதலாம் திகதியில் இருந்து செப்டெம்பர் மாதம் 10 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் 16 இலட்சத்து 18 ஆயிரத்து 769 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை மேலும் தெரிவித்துள்ளது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan