பல சாதனைகளை உடைத்த பில் சால்ட்

13 புரட்டாசி 2025 சனி 15:37 | பார்வைகள் : 124
தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான சதம் மூலம் பில் சால்ட் பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார்.
இங்கிலாந்திற்கு சுற்றுப்பயணம் செய்துள்ள தென் ஆப்பிரிக்கா அணி, 3 ஒருநாள் மற்றும் 3 T20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.
ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்றுள்ளது. முதல் T20 போட்டியில், தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்றுள்ள நிலையில், நேற்று 2வது T20 போட்டி மான்செஸ்டரில் நடைபெற்றது.
முதலில் துடுப்பாட்டம் ஆடிய இங்கிலாந்து அணி, 20 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்களை இழந்து, 304 ஓட்டங்களை எடுத்து அபார சாதனை படைத்தது.
305 என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா அணி, 16.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 158 ஓட்டங்கள் எடுத்தது.
இதன் மூலம், இங்கிலாந்து அணி 146 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இங்கிலாந்து தரப்பில், தொடக்க ஆட்டகாரராக களமிறங்கிய பில் சால்ட், 60 பந்துகளில் 15 பவுண்டரி மற்றும் 8 சிக்ஸர்கள் உட்பட 141 ஓட்டங்கள் குவித்தார்.

இதன் மூலம், பில் சால்ட் பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார். இந்த போட்டியில் சதம் அடித்ததன் மூலம், சர்வதேச T20 கிரிக்கெட்டில் அதிக சதம் அடித்த வீரர்களின் பட்டியலில் 2வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
பில் சால்ட் 4 சதங்களுடன், இந்திய வீரர் சூர்யா குமார் யாதவுடன் 2வது இடத்தை பகிர்கிறார். ரோஹித் சர்மா மற்றும் மேக்ஸ்வெல் 5 சதங்களுடன் முதலிடத்தில் உள்ளனர்.
மேலும், 141 ஓட்டங்கள் எடுத்தன் மூலம், T20 போட்டிகளில் இங்கிலாந்திற்காக அதிக ஓட்டங்கள் எடுத்த வீரர் என்ற தனது சொந்த சாதனையை முறியடித்துள்ளார்.
முன்னதாக 2023 ஆம் ஆண்டு மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக, அவர் 116 ஓட்டங்கள் எடுத்ததே அதிகபட்சமாக இருந்தது.
மேலும், 39 பந்துகளில் சதம் அடித்ததன் மூலம், இங்கிலாந்திற்காக T20 போட்டிகளில் அதிவேக சதமடித்த வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
முன்னதாக லியாம் லிவிங்ஸ்டோனின், 42 பந்துகளில் சதமடித்ததே அதிவேக சதமாக இருந்தது.
மேலும், 141 ஓட்டங்கள் எடுத்ததன் மூலம், தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிராக T20 போட்டிகளில் ஒரு வீரர் எடுத்த அதிகபட்ச ஓட்டங்கள் என்ற சாதனையை படைத்துள்ளார்.
முன்னதாக பாகிஸ்தான் வீரர் பாபர் அசாம், தென் ஆப்பிரிக்காவிற்கு எதிராக 122 ஓட்டங்கள் எடுத்ததே அதிகபட்சமாக இருந்தது.

11 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025