"பிரான்ஸில் வாழும் என் மகளையும் பேத்திகளையும் கொல்ல சதிதிட்டம் நடந்துள்ளது" என கொலம்பிய ஜனாதிபதி தெரிவிப்பு!!

13 புரட்டாசி 2025 சனி 02:40 | பார்வைகள் : 271
கொலம்பிய ஜனாதிபதி கஸ்டாவோ பெட்ரோ (Gustavo Petro), பிரான்ஸில் வாழும் தனது மகளும் பேத்திகளும் கொலைசதிக்கு இலக்காக உள்ளதாகக் கடுமையாக கண்டனம் தெரிவித்துள்ளார். "நான் தான் அதிகமான கொக்கெய்னை பறிமுதல் செய்த ஜனாதிபதி என்பதால் என் குடும்பத்தை தாக்க முயற்சி நடைபெறுகிறது," என்று அவர் கூறியுள்ளார்.
மார்செய்யில் உள்ள அவரது குடும்பத்தினரை கொல்ல முயற்சி செய்பவர், கடந்த ஜூனில் கொலை செய்யப்பட்ட செனட்டர் மிகுவேல் உரிபே டுர்பேயின் கொலையிலும் தொடர்புடையவராக இருக்கலாம் என்றும் அவர் குற்றம்சாட்டினார்.
அவரது அறிக்கையில், வலதுசாரி அரசியல் உறுப்பினர்கள் போதைப்பொருள் குழுக்களுடன் கூட்டுசெய்கிறார்கள் என்றும், அவர்கள் அலுவலகங்களில் போதைப்பொருள் வர்த்தகர்களுடன் தொடர்புடையவர்கள் வருகை தருவதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார். இந்த சதி மிக முக்கியமானதாக இருப்பதாகவும், தனது குடும்பத்தின் பாதுகாப்பு குறித்த அச்சம் அதிகரித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
11 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025