நேபாளத்தில் போராட்டத்திற்கு இடையே ஏற்பட்ட வன்முறை - 51 பேர் பலி

12 புரட்டாசி 2025 வெள்ளி 16:50 | பார்வைகள் : 171
நேபாளத்தில் போராட்டத்திற்கு இடையே ஏற்பட்ட வன்முறையில் இதுவரை 51 பேர் உயிரிழந்துள்ளதாக நேபாள சுகாதாரத் துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
போராட்டம் கட்டுக்கடங்காத வன்முறையாக மாறியதைத் தொடா்ந்து, நாட்டில் பாதுகாப்பை நிலைநாட்டும் பொறுப்பை இராணுவம் ஏற்றுக் கொண்டுள்ளது.
நேபாளத்தில் இடைக்கால பிரதமரை நியமிக்கும் பணியில் இளைஞர் போராட்டக்குழு ஈடுபட்டுள்ளது.
உயர்நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி சுசீலா கார்கி, இடைக்கால பிரதமராக ஆவார் என்று கூறப்படுகிறது.
இதற்காக இராணுவ அதிகாரிகள் அடங்கிய உயர்நிலைக்குழு கூட்டம் இன்று நடைபெறுகிறது.
இந்நிலையில் நேபாளத்தில் இதுவரை நடைபெற்ற போராட்டம் மற்றும் வன்முறையில் 51 பேர் உயிரிழந்துள்ளதாக அந்த நாட்டு சுகாதாரத்துறை அமைச்சு தகவல் தெரிவித்துள்ளது.
இதேவேளை வன்முறையில் சுமார் 1,300 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
10 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025