சுவிட்சர்லாந்தில் ஹெலிகொப்டர் மூலம் கொண்டு செல்லப்படும் 12,000 மீன்கள்

12 புரட்டாசி 2025 வெள்ளி 16:50 | பார்வைகள் : 114
சுவிட்சர்லாந்தில், நதி ஒன்றிலிருந்து 12,000 மீன்கள் ஹெலிகொப்டர் மூலம் வேறு இடத்துக்கு கொண்டு செல்லப்படுகின்றன.
சுவிட்சர்லாந்திலுள்ள Spöl என்னும் நதியிலிருந்து சுமார் 12,000 மீன்கள் ஹெலிகொப்டர் மூலம் வேறு இடத்துக்கு கொண்டு செல்லப்படுகின்றன.
Spöl நதியில் கட்டப்பட்டுள்ள அணை ஒன்றை சில ஆண்டுகளுக்கு முன் சீரமைக்கும்போது, பிளாஸ்டிக் மற்றும் சில ரசாயனங்கள் ஆற்றில் கொட்டி, ஆற்றுப்படுகையிலுள்ள மண்ணில் அவை கலந்துவிட்டன.
ஆகவே, அந்த நதியை சுத்தம் செய்யும் பணி துவக்கப்பட உள்ளது. அந்தப் பணி 2026ஆம் ஆண்டு இறுதிவாக்கில்தான் முடிவடையும்.
ஆகவே, அதுவரை அந்த நதியிலிருக்கும் மீன்களை பாதுகாப்பாக வைத்திருப்பதற்காக, சுமார் 12,000 மீன்கள் நதியிலிருந்து பிடிக்கப்பட்டு ஹெலிகொப்டர் மூலம் வேறு இடத்துக்கு கொண்டு செல்லப்படுகின்றன.
நதி சுத்தமாக்கப்பட்டபின் மீண்டும் அந்த மீன்கள் நதியில் விடப்படும்.
10 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025