நேபாளத்தில் ஆட்சி கவிழ்ந்துள்ள நிலையில் பிரதமர் யார்...?

12 புரட்டாசி 2025 வெள்ளி 15:50 | பார்வைகள் : 213
நேபாளத்தில் ஆட்சி கவிழ்ந்துள்ள நிலையில், அடுத்த பிரதமர் யார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
நேபாளத்தில் கடந்த வாரம் பதிவு செய்யப்படாத 26 சமூக ஊடகங்களுக்கு தடை விதிக்கப்பட்டது.
இந்த தடையை எதிர்த்து நாடு முழுவதும் ஆயிரக்கணக்காண இளைஞர்கள் போராட்டத்தில் இறங்கினர்.
போரட்டத்தை காவல்துறை கட்டுப்படுத்த முயன்றதில், நடைபெற்ற துப்பாக்கி சூட்டில், 19 பேர் உயிரிழந்தனர்.
இதனையடுத்து, போராட்டம் வன்முறையாக மாறி, நாடாளுமன்றம், உச்சநீதிமன்றம், பிரதமர் மற்றும் அமைச்சர்கள் வீடுகள் தீ வைக்கப்பட்டது.
சமூக ஊடகங்கள் மீதான தடை நீக்கப்பட்ட பிறகும் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வந்தது.
இதனை தொடர்ந்து, நேபாள பிரதமர் கே.பி.சர்மா ஒலி ஜனாதிபதி ராமச்சந்திர பவுடேல் மற்றும் பல அமைச்சர்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்தனர். இதனால், நேபாளத்தில் ஆட்சி கவிழ்ந்துள்ளது.
தற்போது வரை, நேபாள முன்னாள் பிரதமரின் மனைவி மற்றும் ஒரு இந்தியா பெண் உட்பட 51 பேர் இந்த வன்முறையில் உயிரிழந்துள்ளனர். 1300 பேர் காயமடைந்துள்ளனர்.
இந்நிலையில், இடைக்கால அரசின் பிரதமராக யார் தேர்வு செய்யப்படுவார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இதற்கான போட்டியில், முன்னாள் நீதிபதி சுசிலா கார்க்கி, காத்மாண்டு மேயர் பாலேந்திர ஷா, பொறியாளர் குல்மான் கிசிங், தரண் மேயர் ஹர்கா ராஜ் சம்பாங் ராய், முன்னாள் துணை பிரதமர் ரபி லாமிச்சானே ஆகியோர் போட்டியில் உள்ளனர்.
நேபாளத்தின் முதல் மற்றும் ஒரே பெண் தலைமை நீதிபதியான, 73 வயதான சுசிலா கார்கி, நேர்மை மற்றும் ஊழலுக்கு எதிரான நிலைப்பாட்டிற்கு பெயர் பெற்றவர்.
இவர், தனது அரசியல் அறிவியல் முதுகலை பட்டத்தை இந்தியாவின் உத்தரப்பிரதேசத்தில் உள்ள பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் பயின்றார்.
ஜூலை 2016 முதல் ஜூன் 2017 வரை தலைமை நீதிபதியாகப் பணியாற்றிய அவர், தற்போது உச்சநீதிமன்ற வழக்கறிஞர் சங்க செயலாளராக உள்ளார்.
பாரபட்சமான தீர்ப்பு காரணமாக சட்டமன்ற உறுப்பினர்கள் சுசிலா கார்க்கிக்கு எதிராக பதவி நீக்கத் தீர்மானத்தைத் தாக்கல் செய்ததைத் தொடர்ந்து, அவர் சிறிது காலம் இடைநீக்கம் செய்யப்பட்டார்.
31 வயதான பாலேன் என்றும் அழைக்கப்படும் பாலேந்திர ஷா, தனது முதுகலைப் பட்டத்தை இந்தியாவின் கர்நாடகாவில் உள்ள விஸ்வேஸ்வரய்யா தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் பயின்றார்.
அரசியலுக்கு வருவதற்கு முன்னர், ராப் பாடல்கள் பாடி வந்த அவர், தனது பாடல்கள் மூலம் ஊழல் சமத்துவமின்மை குறித்து கேள்வி எழுப்பினார்.
2022 ஆம் ஆண்டு காட்மாண்டில் நடைபெற்ற மேயர் தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட்டு, 61,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
54 வயதான குல்மான் கீசிங், 1994 ஆம் ஆண்டில் நேபாள மின்பகிர்மான கழகத்தில் ஊழியராகப் பணியை தொடங்கி, 2016 ஆம்ஆண்டில் அதன் நிர்வாக இயக்குனராகப் பதவி உயர்வு பெற்றார்.
நாட்டில், நாளொன்றுக்கு 18 மணி நேரம் நிலவி வந்த மின்வெட்டுக்கு தீர்வு கண்டதன் மூலம், மக்களிடையே புகழ் பெற்றார்.
அவர் ஓய்வு பெறுவதற்கு 4 மாதங்கள் இருந்த நிலையில், ஒலி அரசால் பதவி நீக்கம் செய்யப்பட்டது, மக்கள் மத்தியில் அவருக்கு ஆதரவை அதிகரித்தது.
2022 ஆம் ஆண்டில், நடைபெற்ற கரண் மேயர் தேர்தலில் ஹர்கா ராஜ் சம்பாங் ராய், சுயேச்சை வேட்பாளராக வெற்றி பெற்றார்.
விஐபி சலுகைகளை ஏற்க மறுத்து, பொதுமக்களுடன் வரிசையில் நின்று மக்களின் கவனத்தை ஈர்த்தார்.
6 ஆண்டுகளாக வெளிநாட்டில் இருந்து விட்டு, நேபாளம் திரும்பிய அவர் ஊழல் மற்றும் வரி உயர்வு, நீர் பற்றாக்குறை ஆகியவற்றுக்கு எதிரான போராட்டங்களில் ஈடுபட்டார்.
2013 ஆம் ஆண்டில் 62 மணி நேர மாரத்தான் பேச்சு நிகழ்ச்சி நடத்தி கின்னஸ் சாதனை படைத்தது புகழ் பெற்றவர் ரபி லாமிச்சானே.
சித்தா குரா ஜனதா சங்கா போன்ற நிகழ்ச்சிகள் மூலம் ஊழலை விமர்சித்தது மக்களிடையே பிரபலமானார்.
2022 ஆம் ஆண்டு ராஷ்ட்ரிய சுதந்திரக் கட்சியை (RSP) தொடங்கிய அவர், தேர்தலில் 20 இடங்களில் வென்று, நேபாளத்தின் 4வது பெரிய கட்சியாக உருவெடுத்தார்.
அதன் பின்னர், பிரச்சந்தா கூட்டணியில் இனைந்து துணை பிரதமர் ஆனார்.
10 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025