கனடாவில் நியுமோனியா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

12 புரட்டாசி 2025 வெள்ளி 11:17 | பார்வைகள் : 177
கனடாவில் கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் நியுமோனியாவுக்காக அவசர சிகிச்சை பிரிவுகளுக்குச் சென்ற நோயாளிகள் எண்ணிக்கை இரட்டிப்பாக உயர்வடைந்துள்ளது என கனடிய சுகாதார தகவல் மையம் தெரிவித்துள்ளது.
இதில் அதிகம் பாதிக்கப்பட்டது 5 முதல் 19 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் என ஆய்வு கூறுகிறது.
கோவிட் தொற்றுக்குப் பின்னர் நியுமோனியாவுக்கான அவசர சிகிச்சை வருகைகள் இவ்வளவு அதிகரித்தது இதுவே முதல் முறை என தெரிவிக்கப்படுகின்றது.
2023-24 காலப் பகுதியில் மக்களை தாக்கிய முதல் பத்து நோய்களில் ஒன்றாக இடம்பிடித்திருக்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
எனினும் 2024-25ல் வயிற்று வலி, தொண்டை/மார்பு வலிக்கு அடுத்ததாக நியுமோனியா மூன்றாவது இடத்திற்கு உயர்ந்துள்ளது.
மிகவும் லெசான அறிகுறிகளுடன் நியுமோனியா காய்ச்சல் நோயாளர் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இது பொதுவாக இருமல், காய்ச்சல், சோர்வு போன்ற லேசான அறிகுறிகளைக் கொண்டிருக்கும்.
பலர் தானாகவே குணமடைகிறார்கள்; ஆனால் சிலருக்கு நரம்பியல் பிரச்சினைகள், தோல் பொடுகுகள் போன்ற தீவிர விளைவுகளும் ஏற்படலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குழந்தைகளுக்கு நீடித்த இருமல், காய்ச்சல், சோர்வு இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுகுமாறு நிபுணர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
10 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025