தொழிற்சங்க தலைமைகளைச் சந்திக்கும் பிரதமர் Sébastien Lecornu!!
11 புரட்டாசி 2025 வியாழன் 23:44 | பார்வைகள் : 7025
நாட்டின் புதிய பிரதமர் Sébastien Lecornu, நாளை வெள்ளிக்கிழமை தொழிற்சங்க தலைமைகளை சந்திக்க உள்ளார்.
புதிய பிரதமரை அரசியல் தலைவர்கள் வரவேற்றுள்ள நிலையில், வரவுசெலவுத்திட்டத்தில் சில 'எரிவுகள்' உள்ளதாகவும், அவற்றை சீராக்க வேண்டும் எனவும் Sébastien Lecornu தெரிவித்துள்ளார். அதை அடுத்து நாளை வெள்ளிக்கிழமை முதலாவது கட்டமாக தொழிற்சங்க தலைவர்களைச் சந்திக்க உள்ளார்.
அதன் இரண்டாம் கட்டமாக வரும் திங்கட்கிழமையும் சந்திப்புக்கள் தொடர உள்ளன.
செப்டம்பர் 10 ஆம் திகதி, நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற வேலை நிறுத்தம் மற்றும் ஆர்ப்பாட்டம் அமையையும், சட்ட ஒழுங்கையும் குலைத்திருந்தன. அதை அடுத்தே உடனடியாக இந்த சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan