Paristamil Navigation Paristamil advert login

iPhone Pink Diamond முதல் iPhone Diamond Rose வரை- உலகின் மிக விலையுயர்ந்த ஸ்மார்ட்போன்கள்

iPhone Pink Diamond முதல் iPhone Diamond Rose வரை- உலகின் மிக விலையுயர்ந்த ஸ்மார்ட்போன்கள்

11 புரட்டாசி 2025 வியாழன் 13:02 | பார்வைகள் : 130


உலகின் மிக விலையுயர்ந்த ஸ்மார்ட்போன்களை வாங்க வேண்டும் என்றால் இந்த பதிவு உங்களுக்கானது.

 

1. Falcon Supernova iPhone 6 Pink Diamond: 48.5 மில்லியன் டொலர்

 

ஃபால்கன் சூப்பர்நோவா ஐபோன் 6 பிங்க் டயமண்ட் (Falcon Supernova iPhone 6 Pink Diamond) உலகின் மிக விலையுயர்ந்த போன் ஆகும்.

 

24 காரட் தங்கம் அல்லது பிளாட்டினத்தில் சுற்றப்பட்ட இதன் பின்புறத்தில் இளஞ்சிவப்பு வைரம் உள்ளது. ஆடம்பரமான இந்த போனை பணக்காரர்களால் மட்டுமே வாங்க முடியும்.

 

 

2. iPhone 5 Black Diamond by Stuart Hughes: 15 மில்லியன் டொலர்

 

ஸ்டூவர்ட் ஹியூஸ் வடிவமைத்த இந்த iPhone 5, திடமான தங்க நிறத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இதன் தனித்துவமான அம்சம் என்னவென்றால் கருப்பு வைர home button ஆகும்.

 

இந்த போன் 600 வெள்ளை வைரங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. அவற்றில் 53 Apple logo-வில் உள்ளன.

 

3. Stuart Hughes iPhone 4S Elite Gold: 9.4 மில்லியன் டொலர்

 

இந்த போனானது rosewood bezel, 100 காரட்டுகளுக்கு மேல் வைரங்கள் மற்றும் 24 காரட் தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. 8.6 காரட் வைரம் கொண்ட home button-ல் 7.4 காரட் carat backup உள்ளது.

 

4. iPhone 4 Diamond Rose Edition: 8 மில்லியன் டொலர்

 

iPhone 4 Diamond Rose Edition திட ரோஸ் தங்கத்தால் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது 500 காரட் வைரங்கள் மற்றும் 7.4 காரட் வைர button உடன் வருகிறது.

 

5. Goldstriker iPhone 3GS Supreme: 3.2 மில்லியன் டொலர்

ஸ்டூவர்ட் ஹியூஸின் மற்றொரு தலைசிறந்த படைப்பான Goldstriker iPhone 3GS Supreme, 18 காரட் rose gold back, 97.5 காரட் வைரங்களுடன் platinum bezel மற்றும் 7.1 காரட் வைர home button-யைக் கொண்டுள்ளது.

 

 

 

 

 

 

வர்த்தக‌ விளம்பரங்கள்