Paristamil Navigation Paristamil advert login

ஆசியக் கிண்ணத்தில் புதிய வரலாறு படைத்த குல்தீப்! பாகிஸ்தான் வீரரின் சாதனை முறியடிப்பு

ஆசியக் கிண்ணத்தில் புதிய வரலாறு படைத்த குல்தீப்! பாகிஸ்தான் வீரரின் சாதனை முறியடிப்பு

11 புரட்டாசி 2025 வியாழன் 12:02 | பார்வைகள் : 112


இந்திய சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் குறைந்த பந்துகளில் 4 விக்கெட்டுகளை ஆசியக்கிண்ணத்தில் வீழ்த்தி வீரர் என்ற சாதனையை படைத்தார்.

துபாயில் நேற்று நடந்த ஆசியக் கிண்ணப் போட்டியில், இந்திய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தை வீழ்த்தியது.

அமீரக அணி 57 ஓட்டங்களில் சுருண்டதன் மூலம், இந்தியாவுக்கு எதிராக குறைந்த ஸ்கோரில் ஆட்டமிழந்த அணியாக பதிவானது.

இப்போட்டியில் மிரட்டலாக பந்துவீசிய குல்தீப் யாதவ் (Kuldeep Yadav) 2.1 ஓவர்கள் வீசி, 7 ஓட்டங்கள் விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

இதன்மூலம் ஆசியக் கிண்ணத்தில் குறைந்த பந்துகளில் 4 விக்கெட்டுகளை கைப்பற்றிய முதல் பந்துவீச்சாளர் என்ற சாதனையை குல்தீப் யாதவ் படைத்தார்.

இதற்கு முன் பாகிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் ஷதாப் கான் (2022யில்) ஹாங் காங் அணிக்கு எதிராக 17 பந்துகளில் 4 விக்கெட்டுகளை வீழ்த்தியதே சாதனையாக இருந்தது.

எனினும், ஆசியக் கிண்ண டி20 வரலாற்றில் சிறந்த பந்துவீச்சு என்ற சாதனை இந்திய வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமாரின் வசம் உள்ளது.

அவர் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக (2022யில்) 4 ஓட்டங்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார்.

வர்த்தக‌ விளம்பரங்கள்