Paristamil Navigation Paristamil advert login

யேமன் தலைநகர் சனாவில் வான்வழி தாக்குதல் - 9 பேர் பலி

யேமன் தலைநகர் சனாவில் வான்வழி தாக்குதல் - 9 பேர் பலி

11 புரட்டாசி 2025 வியாழன் 11:02 | பார்வைகள் : 244


யேமன் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதல்களில் குறைந்தது 9 பேர் கொல்லப்பட்டனர்.

அத்துடன், 100 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் என்று ஹவுத்தி இயக்கம் தெரிவித்துள்ளது.

தலைநகர் சனா மற்றும் அல்-ஜாஃப் மாகாணம் இரண்டிலும் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக ஹவுத்திகளால் நடத்தப்படும் சுகாதார ஆணையகம் தெரிவித்துள்ளது.

இந்தநிலையில், தலைநகரின் அல்-தஹ்ரிர் பகுதியில் உள்ள பாதுகாப்பு அமைச்சகத்தின் வழிகாட்டுதல் தலைமையகத்தைக் குறிவைத்து நடத்தப்பட்ட இந்தத் தாக்குதல்களால் தலைநகரில் உயிரிழப்புகள் ஏற்பட்டதாக குடியிருப்பாளர்கள் தெரிவித்தனர்.

 

 

வர்த்தக‌ விளம்பரங்கள்