Paristamil Navigation Paristamil advert login

கனடாவில் ரிச்மண்ட்ஹில் பகுதியில் கோர விபத்து

கனடாவில் ரிச்மண்ட்ஹில் பகுதியில் கோர விபத்து

11 புரட்டாசி 2025 வியாழன் 11:02 | பார்வைகள் : 179


கனடாவின் ரிச்மண்ட்ஹில் பகுதியில் இடம்பெற்ற கோர விபத்து சம்பவம் ஒன்றில் சிசு ஒன்று கொல்லப்பட்டுள்ளதுடன் மற்றுமொரு குழந்தை உள்ளிட்ட ஆறு பேர் காயமடைந்துள்ளனர்.

இந்த விபத்து சம்பவம் தொடர்பில் யோர்க் பிராந்திய பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

பெஸ்ட் ருட் ஏர்லி எடுயுகேசன் அகடமி, யோங் மற்றும் நொட்ங்கம் வீதிகளுக்கு அருகாமையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

வாகன தரிப்பிடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனம் ஒன்று சிறுவர் பராமரிப்பு மையத்தின் ஜன்னல் ஒன்றை உடைத்துக் கொண்டு உட்பிரவேசித்த காரணத்தினால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது என ஆரம்ப சட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

இந்த சம்பவத்தில் காயமடைந்த 10 பேர் வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவத்தில் ஒன்றரை வயது மதிக்கத்தக்க ஆண் சிசு ஒன்று உயிரிழந்து விட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

மற்றும் ஒரு குழந்தை படுகாயம் அடைந்து ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த வாகனம் வேண்டுமென்றே சிறுவர் பராமரிப்பு நிலையத்திற்குள் பிரவேசிக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

விபத்தில் உயிரிழந்த சிசுவின் குடும்பத்திற்கு நகர மேயர், போலீசார் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் இரங்கல்களை வெளியிட்டு வருகின்றனர்.

 

 

வர்த்தக‌ விளம்பரங்கள்