Paristamil Navigation Paristamil advert login

விடுமுறையின் போது நோய்வாய்ப்பட்ட ஊழியர் தன் சம்பளத்துடன் கூடிய விடுப்பை பிற்போடலாம்!!!

விடுமுறையின் போது நோய்வாய்ப்பட்ட ஊழியர் தன் சம்பளத்துடன் கூடிய விடுப்பை பிற்போடலாம்!!!

10 புரட்டாசி 2025 புதன் 20:28 | பார்வைகள் : 10462


ஒரு ஊழியர் தனது விடுமுறையின்போது நோய்வாய்ப்பட்டால், அவர் தனது சம்பளத்துடன் கூடிய விடுப்பை பிற்போடலாம் என்று பிரான்சின் உயர் நீதிமன்றமான Cour de cassation தீர்மானித்துள்ளது. 

இந்த உரிமையை பெற, நோயாளிக்கான சான்றிதழுடன் வேலைத்தளத்திற்கு தெரிவிக்கப்பட வேண்டும். இந்த தீர்ப்பு, பிரான்ஸ் வேலைச்சட்டத்தை ஐரோப்பிய யூனியன் சட்டத்துடன் இணங்க வைக்கிறது.

ஐரோப்பிய சட்டப்படி, சம்பளத்துடன் கூடிய விடுப்பின் நோக்கம் ஓய்வு மற்றும் பொழுதுபோக்கு, ஆனால் நோய்விடுப்பின் நோக்கம் உடல்நலத்தை மீட்டெடுத்தல். இதனால், இந்த இரண்டும் தனித்தனியான உரிமைகள். மேல்முறையீட்டு நீதிமன்றம் ஊழியருக்குச் சாதகமாக தீர்ப்பளித்ததைக் கண்டித்து மேல்முறையீடு செய்தாலும், அந்தத் தீர்ப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது.

வர்த்தக‌ விளம்பரங்கள்