விஜய் மகன் சஞ்சய் படம் முடங்கியதா?
10 புரட்டாசி 2025 புதன் 18:08 | பார்வைகள் : 1125
சினிமா உலகில் மிகப் பெரிய தயாரிப்பு நிறுவனமான லைகா புரொடக்ஷன்ஸ், தற்போது நிதி நெருக்கடியில் சிக்கி தவிப்பதாகவும், இதன் காரணமாக, நடிகர் விஜய்யின் மகன் சஞ்சய் இயக்கவிருக்கும் திரைப்படம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகும் படம், லைகா தயாரிப்பில் உருவாகவிருந்தது. ஆனால், இந்தப் படத்தின் வேலைகள் தொடங்கிய நிலையில் திடீரென முடங்கியதாக கூறப்படுகிறது. இந்த முடக்கத்திற்கு முக்கியக் காரணம், லைகா நிறுவனத்திற்கு வரவேண்டிய பணம் இன்னும் வரவில்லை என்பதுதான். இந்த பணம் வந்த பின்னரே படப்பிடிப்பு வேலைகள் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
லைகாவின் நிதி நெருக்கடி, சஞ்சய் படத்தின் மீது மட்டுமல்லாமல், மற்ற படங்களின் மீதும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இயக்குநர் பாண்டிராஜ், லைகாவுக்காக ₹60 கோடி பட்ஜெட்டில் ஒரு படம் தயாரிக்க முன்வந்தார். ஆனால், லைகா தரப்பிலிருந்து எந்தவித பதிலும் கிடைக்காததால், அந்த திட்டமும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

























Bons Plans
Annuaire
Scan